காடு கொடுத்த கனியிருக்கு
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்குஓ..ஓ..ஓ..ஓ..
காடு கொடுத்த கனியிருக்கு
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்குஓ..ஓ..ஓ..ஓ..
சிந்திய வேர்வை நிலத்தில் ஓடிச்
சிறுகச் சிறுக ஆறாச்சு -
அதைநம்பிய பேர்கள் வாழ்ந்ததாலே
நாடு நகரம் ஊராச்சு..நாடு நகரம் ஊராச்சு..
காடு கொடுத்த கனியிருக்கு
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்குஓ..ஓ..ஓ..ஓ..
தேக்கு சந்தனம் பாக்கு மூங்கில்
தேங்கி நிக்குது பூமியிலே -
இதைக்காக்கக் தெரிஞ்சு காத்து வந்தா
கடனும் உடனும் தேவையில்லே
கடனும் உடனும் தேவையில்லே
காடு கொடுத்த கனியிருக்கு
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்குஓ..ஓ..ஓ..ஓ..