பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ்
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
ஆண் : காதல் நிலவே
கண்மணி ராதா
நிம்மதியாகத் தூங்கு
ஆண் : கனவிலும் நானே
மறுபடி வருவேன்
கவலை இல்லாமல் தூங்கு
ஆண் : நாளும் தூக்கமில்லாமல்
ஓடும் நதியினைப் போலே
உன்னைக் காத்திருக்க எண்ணமிட்டேன்
ஆசையினாலே
ஆண் : காதல் பாட்டுப் பாடினேன்
தாலாட்டுப் பாடினேன்
என் கண் கலங்கச் செய்து விட்டு
நீயும் ஓடிவிட்டாயே
ஆண் : காதல் நிலவே
கண்மணி ராதா
நிம்மதியாகத் தூங்கு
ஆண் : என்னைத் தேற்றுவாரில்லை
துன்பம் மாற்றுவாரில்லை
உன்னை சேர்ந்து விட்ட நெஞ்சம் இன்னும்
மாறவேயில்லை
ஆண் : என்னைத் தேற்றுவாரில்லை
துன்பம் மாற்றுவாரில்லை
உன்னை சேர்ந்து விட்ட நெஞ்சம் இன்னும்
மாறவேயில்லை
ஆண் : எந்தத் தடையிருந்தாலும்
வாழ்வில் தனித்திருந்தாலும்
அன்று கலந்து விட்ட நமது
உள்ளம் பிரிவதும் இல்லை
ஆண் : காதல் நிலவே
கண்மணி ராதா
நிம்மதியாகத் தூங்கு
ஆண் : கனவிலும் நானே
மறுபடி வருவேன்
கவலை இல்லாமல் தூங்கு
ஆண் : காதல் நிலவே
கண்மணி ராதா
நிம்மதியாகத் தூங்கு
நிம்மதியாகத் தூங்கு
நிம்மதியாகத் தூங்கு