பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் சாய் பாபா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : இவர்கள் நமது பங்காளிகள்
இவர்கள் நமது பங்காளிகள்
இந்திய நாட்டின் முதலாளிகள்
ஊருக்குச் சோறிடும் தொழிலாளிகள்
உண்ண முடியாத அப்பாவிகள்…….
ஆண் : இவர்கள் நமது பங்காளிகள்
இவர்கள் நமது பங்காளிகள்
இந்திய நாட்டின் முதலாளிகள்
ஊருக்குச் சோறிடும் தொழிலாளிகள்
உண்ண முடியாத அப்பாவிகள்…….
உண்ண முடியாத அப்பாவிகள்…….
ஆண் : அறுவகைக் கறியும் சோறும் இவர்கள்
அனுபவம் கண்டதில்லை
அறுவகைக் கறியும் சோறும் இவர்கள்
அனுபவம் கண்டதில்லை
ஆழத்தில் கிண்டிய கூழுக்கு இவர்கள்
அடிதடி நின்றதில்லை
ஆண் : அய்யா சாமி ஆண்டவனே என்னும்
அழுகுரல் ஓயவில்லை
அடடா நாட்டில் ஆயிரம் கொடிகள்
பறப்பதில் குறைச்சலில்லை……
ஆண் : இவர்கள் நமது பங்காளிகள்
இவர்கள் நமது பங்காளிகள்
இந்திய நாட்டின் முதலாளிகள்
ஊருக்குச் சோறிடும் தொழிலாளிகள்
உண்ண முடியாத அப்பாவிகள்…….
உண்ண முடியாத அப்பாவிகள்…….
ஆண் : …………………….
குழு : லால லாலாலா லால லாலாலா
லால லாலாலா லால லாலாலா
ஆண் : கம் ஆன் எவரிபடி
ஆண் : ஏழைகள் கைகள் வானில் உயர்ந்தால்
சந்திரன் கைக்கு வரும்
ஏழைகள் கைகள் வானில் உயர்ந்தால்
சந்திரன் கைக்கு வரும்
எடுத்துக் கொண்டான் அந்தப் பதுக்கல்காரன்
கழுத்துக்குக் கயிறு வரும்
ஆண் : உழைப்பவன் எல்லாம் மனது வைத்தால்
இந்தக் கொடுமைகள் ஒழிந்து விடும்
உத்தமர் காந்தியின் தத்துவ வழியில்
சத்தியம் மலர்ந்து விடும்…
ஆண் : இவர்கள் நமது பங்காளிகள்
இவர்கள் நமது பங்காளிகள்
இந்திய நாட்டின் முதலாளிகள்
ஊருக்குச் சோறிடும் தொழிலாளிகள்
உண்ண முடியாத அப்பாவிகள்…….
உண்ண முடியாத அப்பாவிகள்…….
ஆண் : கம் மை டியர் வைப்……
யோவ் மாமனாரே வாயா…..
குழு : லாலலாலா லாலலாலா லால்லால் லலா
லாலால்லல லலல்லல லால்லால் லலா
லாலால்லல லலல்லல லால்லால் லலா
லலல லலலாள்ள லால்லால் லாலா
லாலலாலா லாலலாலா லால்லால் லாலா…..