இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே
இசையின் மழையிலே உந்தன்
இதயம் நனையவே....
உன்னை நானே வழி மேலே
எதிர்ப்பார்த்தேன் மனம் பூத்தேன்
ஏழு ஸ்வரங்களில் சுகம் தரும்
இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே
பாடிடும் ராகம் நீயன்றோ
ஆஆஆஆ.....ஆஆஆஆஆ....ஆஆஆஆஆ...
பாடிடும் ராகம் நீயன்றோ அதிலோர்
பாவம் நானன்றோ
கண்ணிமை தாளம் போடாதோ மனதில்
கங்கை பாயாதோ
பாடிடும் ராகம் நீயன்றோ அதிலோர்
பாவம் நானன்றோ
கண்ணிமை தாளம் போடாதோ மனதில்
கங்கை பாயாதோ
மோகனம் நீ பேச முத்திரை பதிக்க
பூமியை மறந்து காற்றினில் மிதந்து
நானும் நீயும் ஆசையில் கலந்து
இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே
உன்னை நானே வழி மேலே
எதிர்ப்பார்த்தேன் மனம் பூத்தேன்
ஏழு ஸ்வரங்களில் சுகம் தரும்
இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே....
நெஞ்சினில் காதல் சங்கீதம்
நதியில் நீந்தும் என் தேகம்
தோள்களில் நீயே பூவாரம்
நனைத்தால் எங்கும் தேனூறும்
மன்மத அரங்கம் மெல்லிசை வழங்கும்
மந்திர விளக்கில் வாலிபம் மயங்கும்
காமன் கோயில் அர்ச்சனை நடக்கும்
இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே
உன்னை நானே வழி மேலே
எதிர்ப்பார்த்தேன் மனம் பூத்தேன்
ஏழு ஸ்வரங்களில் சுகம் தரும்
இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே.....