பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : இரு கண்கள் போதாது
ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க
ஆண் : லாலா லலலா லாலா லாலா
லலலா லாலா லாலா லலலா
லால்ல லாலலலா லலலல லா
ஆண் : இரு கண்கள் போதாது
ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க
என் இமையும் மூடாது
கல்யாணத் தேரில் உன்னைப் பார்க்க
ஆனந்தத்தால் விழி நீரிலே
பாடுகின்றேன் ஒரு பாடலே
வாழ்த்துச் சொல்லி பாடும் குயில் நான்
ஆண் : இரு கண்கள் போதாது
ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க
என் இமையும் மூடாது
கல்யாணத் தேரில் உன்னைப் பார்க்க
ஆண் : அங்கே வானத்து வெண்ணிலவும்
ஊர்வலம் போகாமல்
நீ போகும் ஊர்வலத்தை ரசிக்காதோ
உந்தன் தோள்களில் ஆடும் மாலை
ஆனந்தம் தாங்காமல்
பார்க்கின்ற நெஞ்சை அள்ளி பறிக்காதோ
ஆண் : நான் கண்ட கல்யாணங்கள்
ஒன்றல்ல ஒரு நூறு
எங்கெங்கும் இது போல் ஜோடி
ஒரு போதும் அமையாது
என் பாட்டும் புதிர்கள் போடும்
அது உனக்கு புரிந்தால் போதும்
என் ராசாத்தி நீ வாழ்க……
ஆண் : இரு கண்கள் போதாது
ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க
என் இமையும் மூடாது
கல்யாணத் தேரில் உன்னைப் பார்க்க
ஆனந்தத்தால் விழி நீரிலே
பாடுகின்றேன் ஒரு பாடலே
வாழ்த்துச் சொல்லி பாடும் குயில் நான்
ஆண் : இரு கண்கள் போதாது
ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க
என் இமையும் மூடாது
கல்யாணத் தேரில் உன்னைப் பார்க்க
குழு : கமபத பாம கரிகம பபா
ஆண் : அருவி போல் நடக்கும் கன்னிப் பொண்ணு
குழு : பதநி பாம கரிகம நிநீ
ஆண் : துடிக்குதோ மனது நின்னு நின்னு
குழு : ஸநிஸ நிஸ பபா…..
ஆண் : புதிய அனுபவம்
குழு : ஸநிஸ பத ததா…..
ஆண் : உனக்குக் கிடைத்ததோ
அழகு மலரிது மனதினை
சிறகென விரிக்கிறதோ
ஆண் : கெட்டி மேளங்கள் கேட்கும் போது
மகிழ்ந்திடும் நெஞ்சங்கள்
எட்டி என்னை விட்டுச் சென்றால் வருந்தாதா
மெட்டி ஓசைகள் மெல்லச் சொல்லும்
அன்பெனும் கீதங்கள்
கொட்டம் இட்ட நாட்கள் எல்லாம் திரும்பாதா
ஓ அந்த நாட்கள் எல்லாம் என் கண்ணில் ஆடாதோ
ஆனந்த ராகம் எல்லாம் கொண்டு வந்து தாராதோ
சிறு பொன்னே செல்லக் கண்ணே
அடி நீதான் திருமணப் பெண்ணே
புது ஆனந்தம் ஆரம்பம்
ஆண் : இரு கண்கள் போதாது
ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க
என் இமையும் மூடாது
கல்யாணத் தேரில் உன்னைப் பார்க்க
ஆனந்தத்தால் விழி நீரிலே
பாடுகின்றேன் ஒரு பாடலே
வாழ்த்துச் சொல்லி பாடும் குயில் நான்
ஆண் : இரு கண்கள் போதாது
ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க
என் இமையும் மூடாது
கல்யாணத் தேரில் உன்னைப் பார்க்க