பாடகர்கள் : அடிப் அலி, சப்தஸ்வர ரிஷு
இசையமைப்பாளர் : நிஸ் லோபெஸ்
குழு : …………………………
குழு : ஆகாத பாதை
உணர்ந்தவன் நீயே
அன்பென்னும் வழியே
அறிந்தவன் நீயே யாரான
போதும் கொடுப்பவன் நீயே
தீங்கொன்று நடந்தால்
தடுப்பவன் நீயே
ஆண் : காணாததை நீ
காட்டுவாய் கேட்காமலே
கரை ஏற்றுவாய் கூடாததை
நீ போக்குவாய் குறை தீரவே
கரம் நீட்டுவாய்
குழு : கண்ணெதிரினிலே நீ
தெரிவதில்லை உன் அடி
தொழுதால் துயர் வருவதில்லை
உன் ஒருவனுக்கே இங்கு ஈடு
இல்லை இணை யாருமில்லை
குழு : வானும் மண்ணும்
உன்னாலே வையம் சுழலும்
உன்னாலே காணும் யாவும்
உன்னாலே இறைவா இறைவா
குழு : நேற்றும் இன்றும்
உன்னாலே நாளை கூட
உன்னாலே வாழும் வாழ்வே
உன்னாலே இறைவா இறைவா
குழு : …………………………
ஆண் : பொல்லாததும்
பொய் ஆனதும் உன்
பார்வையில் தூளாகுமே
மெய்யானதும் மேலானதும்
உன் ஆணையில் கை கூடுமே
ஆண் : கால்களும் நீ தந்ததே
காயங்களும் நீ தந்ததே
மாயங்களோ நீ என்பதே
ஏன் இந்த மாயமென்று
யாரை யாரை சொல்ல
ஆண் : யாருமே உனதொரு
பாதம் வேண்டினால் கிடைத்திடும்
யோகம் தூயத்திலும் தூயவனே
ஏழைகளின் நாயகனே
குழு : …………………………