பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன
ஆண் : இப்படியே இருந்துவிட்டால்
எப்படி இருக்கும் எதிர்காலம்
பெண் : கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால்
அது கோடை என்றாலும் குளிர்காலம்
ஆண் : இப்படியே இருந்துவிட்டால்
எப்படி இருக்கும் எதிர்காலம்
பெண் : கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால்
அது கோடை என்றாலும் குளிர்காலம்
ஆண் : முழுமதி முகத்தை
கைகளில் மறைத்தால்
வையகம் முழுதும்
இருளாகும்…… இருளாகும்
ஆண் : முழுமதி முகத்தை
கைகளில் மறைத்தால்
வையகம் முழுதும்
இருளாகும்…… இருளாகும்
பெண் : சேல்விழி பார்வை கால் விரல் பார்த்தால்
சம்மதம் என்றே பொருளாகும்
சேல்விழி பார்வை கால் விரல் பார்த்தால்
சம்மதம் என்றே பொருளாகும்
சம்மதம் என்றே பொருளாகும்
ஆண் : இப்படியே இருந்துவிட்டால்
எப்படி இருக்கும் எதிர்காலம்
பெண் : கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால்
அது கோடை என்றாலும் குளிர்காலம்
ஆண் : விழிகளில் வாங்கி மடியினில் தாங்கி
வழிபடும் தெய்வம் பெண்ணல்லவா
விழிகளில் வாங்கி மடியினில் தாங்கி
வழிபடும் தெய்வம் பெண்ணல்லவா
பெண் : பகலினில் தூங்கி இரவினில் விழித்து
மாலையில் மயங்கும் கண் அல்லவா
பகலினில் தூங்கி இரவினில் விழித்து
மாலையில் மயங்கும் கண் அல்லவா
கண் அல்லவா ஆஆ ஆஆ…….
ஆண் : இப்படியே இருந்துவிட்டால்
எப்படி இருக்கும் எதிர்காலம்
பெண் : கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால்
அது கோடை என்றாலும் குளிர்காலம்
ஆண் : சரம் சரமாக
மழைத்துளி விழுந்தால்
சிப்பியின் வயிற்றில்
முத்தாகும்……முத்தாகும்
ஆண் : சரம் சரமாக
மழைத்துளி விழுந்தால்
சிப்பியின் வயிற்றில்
முத்தாகும்……முத்தாகும்
பெண் : கதை கதையாக எழுதுவதெல்லாம்
பொழுது விடிந்தால் முடிவாகும்
கதை கதையாக எழுதுவதெல்லாம்
பொழுது விடிந்தால் முடிவாகும்
பொழுது விடிந்தால் முடிவாகும்
ஆண் : இப்படியே இருந்துவிட்டால்
எப்படி இருக்கும் எதிர்காலம்
பெண் : கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால்
அது கோடை என்றாலும் குளிர்காலம்
இருவர் : ஆஹா…..ஆஹா…..ஹா…..ஹா…..ஹா…..
ஓஹோ…..ஓஹோ….ஹோ…..ஹோ….ஹோ…..