பாடகர்கள் : பிரியங்கா மற்றும் கேசவ்
இசையமைப்பாளர் : எப். எஸ். பைசல்
பெண் : இப்படியே அட இப்படியே
உன் கண்களில் நான் வாழ வேண்டுமடா
கண்மணியே என் கண்மணியே
இந்த சந்தோசம் எப்போதும் போதுமடா
பெண் : அழகு முகங்கள் உலகில்
அட ஆயிரம் உண்டு பாருடா
மனசு முழுக்க அழகாய் இருக்கும்
ஆண் மகன் நீதானடா
ஆண் : முதல் முறை நெஞ்சு முழுவதும்
மழை தந்தது இங்கே நீதானே
உன்னருகில் நான் வாழும் யோகம்
என் அன்பே போதுமே……
பெண் : இப்படியே அட இப்படியே
உன் கண்களில் நான் வாழ வேண்டுமடா
கண்மணியே என் கண்மணியே இந்த
சந்தோசம் எப்போதும் போதுமடா
ஆண் : அன்பினை அன்பினால் ஜெயிக்க அடடா
சொல்லிக் கொடுத்தவள் நீயடி
உன்னிடம் என்னை தந்தது போக
மிச்சமும் இல்லை நானடி
பெண் : இமைக்கும் நேரத்திலே
எனக்குள் வந்துவிட்டாய்
தாமதம் ஏதுமில்லை
என்னையும் மாற்றிவிட்டாய்
ஆண் : அம்மாடி கண்ணாடியும்
பெண்ணாக மாறியதே
நீ வைத்த பொட்டை வைத்து
உன் போல தோன்றியதே
பெண் : உன்னுடன் வாழ்ந்திடும் நேரம்
சட்டென சேர்க்கிறேன் நானும்
எப்போதும் எனக்கு அதுவே போதும்
பெண் : என்னவோ செய்கிறாய்
என்னடா செய்கிறாய்
எனக்கு புரியவில்லையே
உனக்குள் நானும் கரைந்து போனேன்
எனக்கு பிடித்த மழையே
ஆண் : உன்னோடு சேர்ந்திருக்கும்
நிழலும் நானடியே
உன் மனம் சேர்த்து வைக்கும்
நினைவும் நானடியே
பெண் : பார்த்ததும் நீ படிப்பாய்
பார்வையில் என் மனதை
கேட்காமல் நீ தருவாய்
நெஞ்சோடு நினைத்ததை
ஆண் : இத்தனை காதலில் வாழ
ஜென்மங்கள் ஆயிரம் வேண்டாம்
இந்த நிமிடங்கள் போதும் போதும்….