பாடகி : நேஹா நாயர்
இசையமைப்பாளர் : சித்தார்த் விபின்
பெண் : இப்படி ஓர் இன்பம்
இதுவரை நானும்
கண்டதில்லை எங்கும்
தினம் நன்றி சொல்லும் நெஞ்சம்
பெண் : மூச்சும் மூச்சும் கொஞ்சம்
முட்டி கொண்டு கொஞ்சும்
பற்றி கொள்ளும் மஞ்சம்
ஒரு காட்டு தீயயை மிஞ்சும்
பெண் : பார்வை ஒன்றே போதும்
பாசம் கொஞ்சம் போதும்
இது இது இது போதும்
அட இனிமேல் எப்போதும்
பெண் : அடடா உன் தோளிலே சாய்ந்து
உன் கை விரலை பிடித்து
விடிகிற வரை நானும்
விளையாட்டில் விழுந்திட வேண்டும்
பெண் : இப்படி ஓர் இன்பம்
இதுவரை நானும்
கண்டதில்லை எங்கும்
தினம் நன்றி சொல்லும் நெஞ்சம்
பெண் : மூச்சும் மூச்சும் கொஞ்சம்
முட்டி கொண்டு கொஞ்சும்
பற்றி கொள்ளும் மஞ்சம்
ஒரு காட்டு தீயயை மிஞ்சும்
பெண் : அஹா அஹா ஹா…..
அஹா அஹா ஹா…..ஹா….
அஹா அஹா ஹா…..
அஹா அஹா ஹா…..ஹா…..
பெண் : உன்மேல் அட உன்மேல்
என் உயிரும் சாயுதே
என் போல் என் உயிரும் உன்னை
காதல் செய்யுதே
பெண் : முதல் முறை என்னை கிள்ளி பார்த்தேன்
உன் பெயரை அது சொல்லி பார்த்தேன்
நெஞ்சம் வேர்த்தேன் நான்தான்
சரியோ தவறோ சொல்வாயோ
பெண் : இந்த ………… வேண்டாம்
இந்த நிலை வேண்டாம்
இந்த வலி வேண்டாம்
வேண்டாமே வேண்டாமே
பெண் : உண்மை காதல் வேண்டாம்
புலம்பல்கள் வேண்டாம்
தவிப்புகள் வேண்டாம் வேண்டாமே….ஏ…..
வேண்டாமே…..ஏ….ஹா…..ஆஅ……ஆஅ…..