பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் உமா ரமணன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : இனி மேலே நல்ல நேரம்தான்
என் எண்ணம் பொன்னாக
ஈடேறும் காலம்தான் ஒ ஒஹோ
இனி மேலே நல்ல நேரம்தான்
என் எண்ணம் பொன்னாக
ஈடேறும் காலம்தான்
அள்ளித்தான் வாரிக் கட்டு
முல்லப் பூ மால கட்டு
ஆண் : இனி மேலே நல்ல நேரம்தான்
அட இனி மேலே நல்ல நேரம்தான் ஆன் ஆன்
பெண் : பொன்வீணை போடு சிங்காரச் செல்லையா
கல்யாணக் காலம் எப்போது சொல்லையா
ஆண் : நாளென்ன பொழுதென்ன நாம் சேரத்தான்
தேனள்ளித் தொட்டுத் தொட்டு நாம் கூடத்தான்
பூ ஒன்னு பட்டுக் கட்டி என் கூடத்தான்
நீ அள்ளித் தந்ததென்ன இப்போது தான்
பெண் : பொண்ணுக்கு உன் மேலே ஆசை உண்டு
பூலோகம் காணாத பாசம் உண்டு
பொண்ணுக்கு உன் மேலே ஆசை உண்டு
பூலோகம் காணாத பாசம் உண்டு
ஆண் : சொல்லித்தான் தேர்ந்தெடுத்தேன்
சொர்க்கத்தில் பூட்டி வச்சேன்
பெண் : இனி மேலே நல்ல நேரம்தான்
ஆண் : இனி மேலே நல்ல நேரம்தான்
குழு : ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்
ஆண் : கண்ணால பாரு பொன்னால குவிப்பேன்
காதோட கேளு எல்லாமும் கொடுப்பேன்
பெண் : பூவோடு காத்தாக என் கூடத்தான்
நீ வந்து சேர்ந்தாலே போதும் மச்சான்
பாய் மேலே பூ போட்டு பாரட்டத் தான்
பாருங்க நாளொண்ணு தாலாட்டத் தான்
ஆண் : கண்ணுக்கு முன்னால காவேரிதான்
ஒண்ணுக்குள் ஒண்ணாகும் இந்நேரம்தான்
கண்ணுக்கு முன்னால காவேரிதான்
ஒண்ணுக்குள் ஒண்ணாகும் இந்நேரம்தான்
பெண் : சொந்தம்தான் சேர்ந்ததையா
சோகம்தான் போனதையா…..ஆஅ…..ஆ…..ஆ…..
ஆண் : இனி மேலே நல்ல நேரம்தான்
என் எண்ணம் பொன்னாக
ஈடேறும் காலம்தான்
பெண் : இனி மேலே நல்ல நேரம்தான்
என் எண்ணம் பொன்னாக
ஈடேறும் காலம்தான்
ஆண் : அள்ளித்தான் வாரிக் கட்டு முல்லப் பூ மால கட்டு
பெண் : இனி மேலே நல்ல நேரம்தான்
ஆண் : அட இனி மேலே நல்ல நேரம்தான்