பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : இன்று வெண்ணிலா ஈரமானது
ஊடல் கொண்டதால் ஓரமானது
தீண்டும்போது பெண்மை என்ன
தேய்ந்து போகுமா
தென்றல் வந்து பூவில் மோத காயமாகுமா
பாரம் ஏறும்போது நெஞ்சம்
நேரம் பார்க்குமா
பெண் : இன்று வெண்ணிலா ஈரமானது
ஊடல் கொண்டதால் ஓரமானது
தீண்டும்போது பெண்மை என்ன
தேய்ந்து போகுமா
தென்றல் வந்து பூவில் மோத காயமாகுமா
பாரம் ஏறும்போது நெஞ்சம்
நேரம் பார்க்குமா
ஆண் : இன்று வெண்ணிலா ஈரமானது
ஊடல் கொண்டதால் ஓரமானது
பெண் : ஆண்மை தொடாது பெண்மை வராது…..
இந்நேரம் மௌனம் ஒன்றுதான் பாஷை
என்றாலும் உண்மை சொல்ல பேராசை
ஆண்மை தொடாது பெண்மை வராது…..
இந்நேரம் மௌனம் ஒன்றுதான் பாஷை
என்றாலும் உண்மை சொல்ல பேராசை
ஆண் : நாணம் கொள்வதால்
மோகம் நாளும் மீறுமே
மூடி வைப்பதால் கள்ளில் போதை ஏறுமே
கனிகள் இன்று சுமைகள் என்று
கொடியும் வாடுமே
பெண் : இன்று வெண்ணிலா ஈரமானது
ஊடல் கொண்டதால் ஓரமானது
ஆண் : தீண்டும்போது பெண்மை என்ன
தேய்ந்து போகுமா
தென்றல் வந்து பூவில் மோத காயமாகுமா
பெண் : பாரம் ஏறும்போது நெஞ்சம்
நேரம் பார்க்குமா
ஆண் : இன்று வெண்ணிலா ஈரமானது
பெண் : ஊடல் கொண்டதால் ஓரமானது
ஆண் : வா வா நிலாவே காதல் கனாவே
பாவாடை ஓசைக் கேட்டதால் பெண்ணே
என் கண்ணில் தூக்கம் இல்லை ஏன் கண்ணே
வா வா நிலாவே காதல் கனாவே
பாவாடை ஓசைக் கேட்டதால் பெண்ணே
என் கண்ணில் தூக்கம் இல்லை ஏன் கண்ணே
பெண் : ஏங்கும் நெஞ்சமே இன்று என்ன செய்வது
தூங்கும் மஞ்சமோ பாவம் முள்ளில் செய்தது
உருகும் மெழுகு நெருப்பை என்ன
கேள்வி கேட்பது
ஆண் : இன்று வெண்ணிலா ஈரமானது
ஊடல் கொண்டதால் ஓரமானது
பெண் : தீண்டும்போது பெண்மை என்ன
தேய்ந்து போகுமா
தென்றல் வந்து பூவில் மோத காயமாகுமா
ஆண் : பாரம் ஏறும்போது நெஞ்சம்
நேரம் பார்க்குமா
இருவர் : லால்ல லால்ல லா லால்ல லால்ல லா
லால்ல லால்ல லா லால்ல லால்ல லா