பாடகர்கள் : அனுபமா டோமினிக்
மற்றும் சிப்ரா போஸ்
இசையமைப்பாளர் : ரஞ்சித் பரோட்
பெண் : இந்திரன் அல்ல
மன்மதன் அல்ல
சந்திரன் அல்ல
இவன் அந்த ஆண்
என்ன சொல்ல
பெண் : என் வெட்கம்
வானவில் ஆனது
என் அரும்புகள் மலரால் ஆனது
யாரிவன்
என் பெயரே கவிதையாக
என் இளமை நனைந்து போக
குழு : இந்த பூமிக்கு வந்த
பெண் : ஒரு முறை
ஒரே ஒரு முறை
அவன் என்னை பார்த்தல்
குழு : யே யே யே….
யே யே….
குழு : இவன் பார்த்தல்
நெஞ்சம் மிஸ் மிஸ் ஆகும்
லவ் கிராபிக்ஸ் ஓடும்
இவன் வார்த்தை
புது தேசிய கீதம்
டீன் ஏஜ் இன் பாடம்
பெண் : ஹாஸ்டலில் எல்லாம்
இவனது படங்களே இருக்கும்
நினைக்கும் போதே
ரகசிய வாசம் அடிக்கும்
ராத்திரி எல்லாம்
அட இளமை பசிக்கும்
இளமை பசிக்கும்
இவனது நினைவே தினமும்
உணவாய் இருக்கும்
பெண் : மலர் பெண்மை
அதை மெல்ல தீர்க்கும் நாள்
விடிந்ததும் களைப்பால்
நூறு முத்தம் நிதம்
தருகிட வந்தான்
எங்கெங்கு நடந்தான்
பெண் : ஆ…ஆ….ஆ…..
ஆ……ஆ….ஆ….
ஆ…ஆ….ஆ…..
குழு : மலர்த்தோட்டம் அதில்
புயலாக வந்தான்
பல பூக்கள் கொய்தான்
இரவெல்லாம் அவன்
கனவாக வந்தான்
சுக லீலை செய்தான்
பெண் : ஆ…ஆ….ஆ…..
ஆ…ஆ……ஆ….ஆ….