இதயம் இதயம் இணைகிறதே
இது ஒரு புது கவிதை
இனியும் இனியும் தொடர்ந்திடுமே
தினம் தினம் ஒரு கவிதை...(இதயம்)
பூங்காற்றே நில்லு நீ விலகியே நில்லு
பூ மேனி திரிந்தாள் நீ தழுவியே செல்லு
நான் இங்கு நலமே நலமே
நலமா நலமா காற்றே சொல்லு...(இதயம்)
நெஞ்சம் மணம் நிறைந்த மஞ்சம்
இரவுகளில் அஞ்சும் விழி சிவந்து கெஞ்சும்
கொஞ்சம் மயக்கம் வந்து கொஞ்சும்
தனிமையென மிஞ்சும் உடல் படர தஞ்சம்
ஹோ...மாலையில் மலரும் காலையில் மணக்கும்
காயங்கள் பார்த்து தனிமையில் சிரிக்கும்..(பூங்காற்றே)
தேகம் மழை பொழியும் மேகம்
கரைந்து விடும் மேகம் தணியும் அந்த தாகம்
யாகம் ஆசைகளின் வேகம் காமனது யோகம்
இரண்டும் ஒரு பாகம்
ஹோ..ஊடலில் தானே தேடலின் தொல்லை
கூடலில்தானே ஊடலின் எல்லை (பூங்காற்றே)