கங்கை நதி மறையலாம்
வங்கக் கடல் குறையலாம்
கங்கை நதி மறையலாம்
வங்கக் கடல் குறையலாம்
பனி தூங்கும் இமயம் கூட மண்ணில் சாயலாம்
காதல் உள்ளம் சாய்ந்து போகுமா ஓஓஒ..
காற்றடித்தால் கலைந்து போகுமா
கங்கை நதி மறையலாம்
வங்கக் கடல் குறையலாம்
பனி தூங்கும் இமயம் கூட மண்ணில் சாயலாம்
காதல் உள்ளம் சாய்ந்து போகுமா ஓஓஒ..
காற்றடித்தால் கலைந்து போகுமா
கட்டளை போட்டுவிட்டால் கடலும் தூங்குமா
கரைகள் தடுத்துவிட்டால் அலையும் ஓயுமா
கட்டளை போட்டுவிட்டால் கடலும் தூங்குமா
கரைகள் தடுத்துவிட்டால் அலையும் ஓயுமா
நிலவினை திரையைக் கட்டி மறைக்க முடியுமா
நிலவினை திரையைக் கட்டி மறைக்க முடியுமா இங்கு
காவல் ஒன்று போட்டுவிட்டால் காதல் அடங்குமா
புதைத்த பின்னும் விதைகள் முளைக்குமே..ஆஆஆ..
பறித்த பின்னும் பூக்கள் மணக்குமே
கங்கை நதி மறையலாம்
வங்கக் கடல் குறையலாம்
பனி தூங்கும் இமயம் கூட மண்ணில் சாயலாம்
காதல் உள்ளம் சாய்ந்து போகுமா ஓஓஒ..
காற்றடித்தால் கலைந்து போகுமா
இயற்கை உணர்ச்சி அன்றோ காதல் என்பது
இதனை தடுக்கும் சக்தி எங்கு உள்ளது
இயற்கை உணர்ச்சி அன்றோ காதல் என்பது
இதனை தடுக்கும் சக்தி எங்கு உள்ளது
தடி கொண்டு அடித்துவிட்டால் தண்ணீர் பிரியுமா
தடி கொண்டு அடித்துவிட்டால் தண்ணீர் பிரியுமா
உயிர் காதல் தீயில் நெய்யை விட்டால்
அணைந்து போகுமா
சூரியனும் கறுப்பதில்லையே..ஆஆஆ...
காதல் நிறம் வெளுப்பதில்லையே
கங்கை நதி மறையலாம்
வங்கக் கடல் குறையலாம்
பனி தூங்கும் இமயம் கூட மண்ணில் சாயலாம்
காதல் உள்ளம் சாய்ந்து போகுமா ஓஓஒ..
காற்றடித்தால் கலைந்து போகுமா
காதல் உள்ளம் சாய்ந்து போகுமா ஓஓஒ..
காற்றடித்தால் கலைந்து போகுமா......