பாடகி : கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : கங்கை அமரன்
பெண் : எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா
இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா
பொழுதாகிதான் உலை வைக்கணும்
சோறாக்கித்தான் இலை போடணும்..ஹோ..
பெண் : எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா
இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா
பெண் : நூலாடைகள் மேலே பாதியும் கீழே பாதியும் மூட
நான்தான் ஒரு காதல் கீதமும் காமன் வேதமும் பாட
ஓராயிரம் தாகம் தீரவும் மோகம் தீரவும் கூட
வா வா இனி வாடை நானென ஓடம் நீயென ஆட
பெண் : நீங்காமல் நானிருப்பேன் வாழும் வரை
ஓயாமல் நான் படிப்பேன் காதல் கதை
பேசாத பேச்செல்லாம் ஜாடை பேசும்
பெண் : எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா
இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா
பொழுதாகிதான் உலை வைக்கணும்
சோறாக்கித்தான் இலை போடணும்
பெண் : எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா
இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா
பெண் : நீரூற்றிட மாசம் பார்க்குது பருவம் பாக்குது வானம்
தாயாகிட நேரம் பார்க்கணும் நாளும் பார்க்கணும் நானும்
ராசா உனை கோபம் வாட்டுது தாபம் வாட்டுது பாவம்
நீதான் எனை தேனா கொஞ்சிடு தானா கூப்பிடும் தேகம்
பெண் : தூறலும் போடுதய்யா கோடை மேகம்
நீராட வேணுமய்யா நீயும் நானும்
வா மாமா பூமேனி எங்கும் போடு
பெண் : எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா
இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா
பொழுதாகிதான் உலை வைக்கணும்
சோறாக்கித்தான் இலை போடணும்
பெண் : எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா
இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா