எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி
எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி
மஞ்சளுக்கு உரியவளே மண்ணாளும் உமையவளே
மங்கையரின் குங்குமத்திலே - என்றும்
குடிகொண்டு வாழ்பவளே நம்பிக்கை கொண்டோர்க்கு
துணையாக வருபவளே
மஞ்சளுக்கு உரியவளே மண்ணாளும் உமையவளே
மங்கையரின் குங்குமத்திலே - என்றும்
குடிகொண்டு வாழ்பவளே நம்பிக்கை கொண்டோர்க்கு
துணையாக வருபவளே
எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி
எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி
மண்ணெல்லாம் திருநீறு அம்மா உன் வாசலிலே
தாயே
மாறிவரும் உலகத்திலே நீ மாறாத மாரியம்மா
மண்ணெல்லாம் திருநீறு அம்மா உன் வாசலிலே
தாயே
மாறிவரும் உலகத்திலே நீ மாறாத மாரியம்மா
வெள்ளை மனம் உன்னுடைய கோயில்
வேப்ப மரம் உன்னுடைய வாசல்
கண்ணகியே நாயகியே நீயே உன்னை
கை கூப்பி வணங்குகிறோம் நாங்கள்
தாயே ஏ ஆத்தா - உன்
தாழ் பணிந்து கும்பிடுறோம் ஆத்தா
தாயே ஏ ஆத்தா - உன்
தாழ் பணிந்து கும்பிடுறோம் ஆத்தா
கற்பூர ஒளியினிலே காட்சி தரும் திரிசூலி
தாயே
சாம்பிராணி வாசனையை தேடிவரும் மாகாளி
கற்பூர ஒளியினிலே காட்சி தரும் திரிசூலி
தாயே
சாம்பிராணி வாசனையை தேடிவரும் மாகாளி
பம்பை ஒலி கேட்டு வரும் தாயே
பக்தர்களை காப்பவளும் நீயே
காமாட்சி மீனாட்சி தாயே உன்னை
கை கூப்பி வணங்குகிறோம் நாங்கள்
எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி
எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி