பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : ஆஆ…….ஆஆ…….ஆஆ…….ஆஆ……..
பெண் : என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு
என் வாழ்க்கையில் ஆயிரம் இன்ப நினைவு
என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு
என் வாழ்க்கையில் ஆயிரம் இன்ப நினைவு
பெண் : என் மாளிகை கேட்பது மன்னன் வரவு
என் மாளிகை கேட்பது மன்னன் வரவு
தன்மானத்தில் மானுடன் நான் உறவு
தன்மானத்தில் மானுடன் நான் உறவு
தன்மானத்தில் மானுடன் நான் உறவு ஆ……ஆ…
பெண் : முல்லை மொட்டு அள்ளி இரைத்த
மஞ்சம் உண்டு
ஆஆ ….ஆஹா ….ஆஹா….
முன்னும் பின்னும் காதல் பேசும்
ஓவியம் உண்டு
தங்க நிலா முற்றத்தில் தவழ்வதுண்டு
தனிமையிலே கனவினில் நான் மிதப்பதுண்டு
பெண் : ஆஆ….ஆஆ…ஆஆ…ஹா …..ஆஆ
ஆஆ….ஆஆ…ஆஆ…
பெண் : என் ஆடையை பார்ப்பதில் வேகம் வரலாம்
என் ஆட்டத்தை பார்க்கையில் மோகம் வரலாம்
என் ஆடையை பார்ப்பதில் வேகம் வரலாம்
என் ஆட்டத்தை பார்க்கையில் மோகம் வரலாம்
பெண் : என் ஜாடையை கண்டதும் தாகம் வரலாம்
என் ஜாடையை கண்டதும் தாகம் வரலாம்
அந்த தாகத்தை தீர்க்க என் இல்லம் வரலாம்
என் வாழ்க்கையை கேட்டபின் கண்ணீர் வரலாம்
என் வாழ்க்கையை கேட்டபின் கண்ணீர் வரலாம்
பெண் : கண்ணிரெண்டில் விளையாடும்
கலை காணுங்கள்… ஆஆ….ஆஆ…ஆஆ…
கைப்புறத்தில் ஓசையிடும் வளைக் காணுங்கள்
ஆஆ….ஆஆ…ஆஆ…
வெள்ளிரதம் போல் இருக்கும் உடல் காணுங்கள்
விண்மீனை காண்பதுபோல் என்னைக் காணுங்கள்
ஆஆ….ஆஆ…ஆஆ…
பெண் : பொன்மாலையில் நான் கொண்ட அலங்காரம்
இம்மேடையில் நான் செய்யும் அதிகாரம்
பொன்மாலையில் நான் கொண்ட அலங்காரம்
இம்மேடையில் நான் செய்யும் அதிகாரம்
பெண் : கண் பார்வையில் நான் சொல்லும்
கலை ஆர்வம்
கண் பார்வையில் நான் சொல்லும்
கலை ஆர்வம்
ஒரு பாதியைத்தான் சொல்லும் முகபாவம்
அது ஊமையின் கனவுக்கு விலையாகும்…….
அது ஊமையின் கனவுக்கு விலையாகும்…….