என் நெஞ்சு உன்னையகலாது
அன்பை அசைக்க முடியாது (என்)
அருவியில் ஆடி நாமே
ஆனந்தங் காண்போமே
காதலின் இன்பத் தேனை
மகிழ்வாக அடைவோமே
உளந்தனில் என்றும் மீளா
ஆனந்தங் காண்போமே
காதலின் இன்பத் தேனை
மகிழ்வாக அடைவோமே
நம் வழியில் பூ விரித்தே
நல்ல மணத்தை பரப்பும்......(என்)
மத்த கஜத்தில் ஏறி
குல மன்னர்களைப் போலே
மெத்த நலங்கள் கொண்டே
பூங் கானகமும் ஆள்வோனே
ஆராமுதே நீ எனையே
அள்ளி நிதம் பருகு.......(என்)
என்றும் உனது நினைவாலே
மனம் உருகுகிறேன் அமுதே
அன்பு நிறை நின் வார்த்தை
இன்பந் தருமே தமிழாய்
புன்னகையால் காதலெனும்
போதை தருவாயோ......(என்)