பாடகர்கள் : சத்யா பிரகாஷ் மற்றும் எம்எம் மானசி
இசையமைப்பாளர் : ஜோஸ் பிராங்க்ளின்
ஆண் : என் மோக திரையாரோ நீ
மறைமேக பிரையாரோ நீயடி
என் சுவாச அறையாரோ நீ நீ
யாரோ யாரோடி
பெண் : ஆராரோ நீ யாரோட
விழி காட்டும் வழி யாரோ நீயாட
மனம் ஏங்கும் வலியாரோ நீ நீ
யாரோ யாரோட
ஆண் : எதிரில் உன்னை பார்ப்பேனோ
எதிர்பார்த்துதான் நிற்கின்றேன்
எதிரில் உன்னை பார்த்த பின்
பேசாமல் போகின்றேனே
ஆண் : உன் தோள்களில் சாயாமல்
என் கண்களும் சாயாதன்பே
கண் இரண்டும் சாய்ந்தாலும்
நினைவால் உணர்வால் அணைப்பேன்
ஆண் : இவள் யாரோ இவள் யாரோ
கயல் விழி வழி சொல்வாளோ ஓ
பெண் : இவன் யாரோ இவன் யாரோ
உயிர் இவன் கரை சேராதோ
ஆண் : இவள் யாரோ இவள் யாரோ
கயல் விழி வழி சொல்வாளோ ஓ
பெண் : இவன் யாரோ இவன் யாரோ
உயிர் இவன் கரை சேராதோ
ஆண் : உன் கன்னம் சிவக்கிறதே
புது நாணம் பிறக்கையிலே
அதை வானம் ரசிக்கிறதே
மழை காற்றின் சாரல் தூறும் போதே
ஆண் : புது கதை தொடங்கியதே
உன் கைகளை பிடித்திடவே
சிறு இதழ் முளைக்கிறதே
மனம் ஏங்கும் உந்தன் சிரிப்பின் சத்தம்
பெண் : கனவின் கணவா இது கனவா
உன்னை நான் சேரும் நாள் இதுவா
உயிர்களிடையே ஒரு கதவா
உயிரை தரவா ஓ ஹோ
ஆண் : மழையே மழையே அடை மழையே
மாலை பொழுதின் சிறு வெயிலே
மலரின் அழகும் உன் நகலே
தாயும்மானவளே
பெண் : இசை அதன் திசையில் உந்தன் பேச்சில்
தொடர்ந்திட எங்கும் கண்டேனே
வீசிடும் காற்றினில் இலையாய் மாறி
எங்கும் செல்கின்றேன் நானே நானே
ஆண் : என் விரதங்கள் உடைந்திடுதே
அடி நம் இடைவெளிகள் குழைந்திடவே
பெண் : இளம் பெண் இதழ் இரண்டும்
உலர்கிறதே
அட உந்தன் பிரிவாலடா
ஆண் : என் விரதங்கள் உடைந்திடுதே
அடி நம் இடைவெளிகள் குழைந்திடவே
பெண் : இளம் பெண் இதழ் இரண்டும்
உலர்கிறதே
அட உந்தன் பிரிவாலடா
ஆண் : உன் கன்னம் சிவக்கிறதே
புது நாணம் பிறக்கையிலே
அதை வானம் ரசிக்கிறதே
மழை காற்றின் சாரல் தூறும் போதே
ஆண் : புது கதை தொடங்கியதே
உன் கைகளை பிடித்திடவே
சிறு இதழ் முளைக்கிறதே
மனம் ஏங்கும் உந்தன் சிரிப்பின் சத்தம்