பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். என். சுரேந்தர்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ
பெண் : என் காதல் ஓடங்கள்
கரை சேரும் நேரங்கள்
பூங்காற்று மேலும் வீசுதே….
அலை வந்து பூக்கள் தூவுதே…
மலர்கணை நெஞ்சில் பாய்ந்ததே
ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே….
பெண் : என் காதல் ஓடங்கள்
கரை சேரும் நேரங்கள்
பூங்காற்று மேலும் வீசுதே….
அலை வந்து பூக்கள் தூவுதே…
மலர்கணை நெஞ்சில் பாய்ந்ததே
ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே….
ஆண் : ………………………………
பெண் : தீ மீது வீழ்ந்த மீனொன்று
தண்ணீரை மீண்டும் தேடும்
வீசும் காற்றில் வீழ்ந்த பூ ஒன்று
கிளை மீது என்று சேரும்
பெண் : நீலவானில் ஜோடி மேகம்
போகும் போது சோக ராகம்
ஒரு கண்ணில் சலனம்
மறு கண்ணில் மௌனம்
சூரியன் ஏங்குது தாமரை தூங்குது…..
பெண் : என் காதல் ஓடங்கள்
கரை சேரும் நேரங்கள்
பூங்காற்று மேலும் வீசுதே….
அலை வந்து பூக்கள் தூவுதே…
மலர்கணை நெஞ்சில் பாய்ந்ததே
ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே….
ஆண் : ………………………………
பெண் : பாவை நெஞ்சில் நூறு காயங்கள்
ஆறாமல் காதல் ஏது
கண்ணில் சோக ஆறு பாருங்கள்
கண்ணீரே எந்தன் தூது
பெண் : கோதை வீடு சரிந்த போது
கோலம் போட வாசல் ஏது
கனவுகள் மீது உறங்கினள் மாது
நெஞ்சிலே ஆசைகள் மௌனமே பாஷைகள்
பெண் : என் காதல் ஓடங்கள்
கரை சேரும் நேரங்கள்
பூங்காற்று மேலும் வீசுதே….
அலை வந்து பூக்கள் தூவுதே…
மலர்கணை நெஞ்சில் பாய்ந்ததே
ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே….
மலர்கணை நெஞ்சில் பாய்ந்ததே
ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே….