பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : ஆர். டி. பர்மன்
பெண் : தேவ மகள் போல போகும் நதியானது
காலம் துணையாக சேரும் கரையானது
தாளம் தவறாமல் ஆடும் அலையானது
தவழும் பயணங்கள் காண அழகானது
பெண் : நதியின் தேரோட்டமே ஜீவ சங்கீதமே
நதியின் தேரோட்டமே ஜீவ சங்கீதமே..என்றுமே…
பெண் : அந்தி மேகங்கள் போல் காலம் விரைகின்றது
அது போகின்ற இடம் எங்கு யார் பார்த்தது
காலம் வாழ்வோடு கை கோர்த்து நடக்கின்றது
பாதை புரியாமல் எங்கெங்கோ செல்கின்றது
பெண் : இன்ப சந்தோஷமே ஜீவ சங்கீதமே
இன்ப சந்தோஷமே ஜீவ சங்கீதமே
இன்பமே இன்பமே வாழ்வெல்லாம் இன்பமே….
இன்பமே இன்பமே வாழ்வெல்லாம் இன்பமே…
பெண் : ஜனன மரணங்கள் வாழ்வில் நிலையானது
பூமி அதனாலே இன்னும் உயிர் வாழுது
இது விதியானது தெய்வ முடிவானது
இது விதியானது தெய்வ முடிவானது…வாழ்விலே