பாடகர்கள் : இளையராஜா மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சின்னத் தம்பி சின்னத் தம்பி
முழிச்சுப் பாத்தா கலக்கம் இல்லே
சின்னத் தம்பி சின்னத் தம்பி
முழிச்சுப் பாத்தா கலக்கம் இல்லே
சின்னத் தம்பி
உன்னை தினம் மிரட்டிடும்
கண்ட படி விரட்டிடும்
எல்லா வேடிக்கையும் நல்லா பாத்துக்கோ
ஆண் : சின்னத் தம்பி சின்னத் தம்பி
முழிச்சுப் பாத்தா கலக்கம் இல்லே
சின்னத் தம்பி
ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
ம்… ம்… ம்… ம்… ம்… ம்…
குழு : …………………………….
ஆண் : வயித்துப் பொழப்புக்குக் கஷ்டப் பட்டு
தன்மானம் இழப்பது என்னத்துக்கு
வாழ்வு முழுவதும் குட்டுப் பட்டு
நீ வளைஞ்சு கொடுப்பது என்னத்துக்கு
ஆண் : பாரதி பட்டுக்கோட்ட பாவலரு
அவர் பாடிய பாட்டுக்கள கேட்டுப்புட்டு
மாறவும் இல்ல நம்ம தோழரு
நம்ம மக்களும் நிக்குதையா வெக்கப்பட்டு
எல்லோரும் இங்கே மன்னவரு
என்று ஏமாந்தோம் யாரு நல்லவரு
ஆண் குழு : என்று ஏமாந்தோம் யாரு நல்லவரு
ஆண் : சின்னத் தம்பி சின்னத் தம்பி
முழிச்சுப் பாத்தா கலக்கம் இல்லே
சின்னத் தம்பி
குழு : ……………………………….
ஆண் : கோட்டைக்குள் தீட்டுகிற திட்டம் எல்லாம்
ஏழை வீட்டுக்குள் வந்ததில்லே சின்னத் தம்பி
ஆட்டியே வைக்கும் இந்தக் கஷ்டம் எல்லாம்
வந்து மாற்றிட யாரும் இல்லே சின்னத் தம்பி
ஆண் : ஏழையின் வாழ்க்கை சந்து மூலையில
இங்கு ஏழைக்கு ஏழை கூட துணை இல்லே
வேளைக்கு வேளை உண்ண உணவில்லே
எங்க சுகம் எல்லாம் அந்தக் கனவிலே
நமக்கென ஒரு தலைவனை
அந்த சினிமாவில் தான் தினம் பாக்கணும்
ஆண் குழு : அந்த சினிமாவில் தான் தினம் பாக்கணும்
ஆண் : சின்னத் தம்பி சின்னத் தம்பி
முழிச்சுப் பாத்தா கலக்கம் இல்லே
சின்னத் தம்பி
உன்னை தினம் மிரட்டிடும்
கண்ட படி விரட்டிடும்
எல்லா வேடிக்கையும் நல்லா பாத்துக்கோ
ஆண் : சின்னத் தம்பி சின்னத் தம்பி
முழிச்சுப் பாத்தா கலக்கம் இல்லே
சின்னத் தம்பி