பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
ஆண் : சிக்கென்று ஒட்டிக் கொண்ட
ஆடைக் கட்டி வந்ததென்ன
பாவையே…….பாவையே…..
சிக்கென்று ஒட்டிக் கொண்ட
ஆடைக் கட்டி வந்ததென்ன
பாவையே…….பாவையே…..
ஆண் : சட்டென்று பாக்கும்போது
ஆணைப் போல நின்றதென்ன
சட்டென்று பாக்கும்போது
ஆணைப் போல நின்றதென்ன
பூவையே பூவையே….
ஆண் : சிக்கென்று ஒட்டிக் கொண்ட
ஆடைக் கட்டி வந்ததென்ன
பாவையே…….பாவையே…..
ஆண் : கால்சட்டை மாட்டிக்கொண்டால்
மாறாது உருவம்
கைச்சட்டை போட்டுக் கொண்டால்
மறையாது பருவம்
கால்சட்டை மாட்டிக்கொண்டால்
மாறாது உருவம்
கைச்சட்டை போட்டுக் கொண்டால்
மறையாது பருவம்
ஆண் : ஈரெட்டு வயதுக்கு எடுப்பாக தெரியும்
ஈரெட்டு வயதுக்கு எடுப்பாக தெரியும்
பார்க்கின்ற கண்களுக்கு யாரென்று தெரியும்
ஆண் : சிக்கென்று ஒட்டிக் கொண்ட
ஆடைக் கட்டி வந்ததென்ன
பாவையே…….பாவையே…..
ஆண் : நீ கொண்ட கூந்தல் என்ன
குதிரையின் வாலோ
நீளத்தைப் பார்க்கும்போது
ஒரு முழம்தானோ
ஆண் : நீ கொண்ட கூந்தல் என்ன
குதிரையின் வாலோ
நீளத்தைப் பார்க்கும்போது
ஒரு முழம்தானோ
ஆண் : தேனூறும் உதட்டுக்கு
சாயங்கள் ஏனோ
தேனூறும் உதட்டுக்கு
சாயங்கள் ஏனோ
காலத்தில் நடக்கின்ற
கொடுமை இதானோ
ஆண் : சிக்கென்று ஒட்டிக் கொண்ட
ஆடைக் கட்டி வந்ததென்ன
பாவையே…….பாவையே…..
ஆண் : சேலைக்கு வேலை தர
மறந்தது மேனி
சிட்டுப் போல் கட்டு விட்டு
பறக்கின்ற தேனீ
ஆண் : சேலைக்கு வேலை தர
மறந்தது மேனி
சிட்டுப் போல் கட்டு விட்டு
பறக்கின்ற தேனீ
ஆண் : நாலும் தெரிந்த பெண்மை
நடக்கட்டும் நாணி
நாலும் தெரிந்த பெண்மை
நடக்கட்டும் நாணி
நாட்டுக்கும் வீட்டுக்கும்
அவள்தானே ராணி