பாடகர்கள் : கார்த்திக் மற்றும்
வர்ஷா ரஞ்சித்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பெண் : ஆ…..ஆ…..ஆ..ஆ..ஆ….
ஆ…..ஆ…..
பெண் : செல்லம்மா செல்லம்…
ம்ம்…ம்…..ம்ம்…..
செல்லம்மா செல்லம்
என் பேச்ச வெல்லும்
தித்திக்குதா தித்திக்குதா
பெண் : குட்டிமா கூட
குயிலம்மா பாட
ஒத்துக்குதா ஒத்துக்குதா
பெண் : அப்பாவுக்கு அம்மா நானே
அம்மாவுக்கும் அப்பா நானே
செல்லம் தானே
ஆ..ஆ…ஆ…..ஆ….
ஆண் : செல்லம்மா செல்லம்
என் பேச்ச வெல்லும்
தித்திக்குதே தித்திக்குதே
ஆண் : குட்டிமா கூட
குயிலம்மா பாட
ஒத்துக்குதே ஒத்துக்குதே
ஆண் : தங்கை இவளின்
தலை கோத
மயில் தோகையும் ஏங்காதா
பூக்கள் எல்லாம் இவளுக்கு
முன் பூப்பூக்கவே தயங்காதா
பெண் : காளான் குடை குள்ளேயே
தூங்கும் எறும்பை போல்
அப்பா தோளோடு சிறு தூக்கம்
அடடா பாசத்தில் பழைய சாதத்தில்
அம்மா கைவாசம் ருசி ஆகும்
ஆண் : நம் சொந்தம் போல்
சொர்க்கமும் இருக்குமா
தாய் பூமுகம் தரும் சுகம் கிடைக்குமா
சொல்லமா… ஆ….
பெண் : செல்லம்மா செல்லம்
என் பேச்ச வெல்லும்
தித்திக்குதா தித்திக்குதா
பெண் : குட்டிமா கூட
குயிலம்மா பாட
ஒத்துக்குதா ஒத்துக்குதா
ஆண் : வேலன் அழகோ மயிலாடு
எங்கள் மயிலே விளையாடு
பெண் : கோயில் தானே நம் வீடு
குல தெய்வங்கள் நம்மோடு
ஆண் : எங்கள் வீட்டுக்கு
யார் தான் வந்தாலும்
உளியின் சத்தங்கள் வரவேற்கும்
அளவே இல்லாத
அன்பை மட்டும் தான்
தெய்வம் நம்மோடு எதிர்பார்க்கும்
பெண் : என் அண்ணனின்
கைகளே ஊஞ்சலா
என் தாய் மொழி ஆனதே கொஞ்சலா
அம்மம்மா…ஆ….