பாடகர்கள் : பொன்னுசாமி மற்றும் ஜமுனாராணி
இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்
ஆண் : அந்தி மலர் பூத்திருக்கு
ஆசை மனம் காத்திருக்கு
முந்தி விடும் முன்னாலே ஓடிவா…….
முந்தி விடும் முன்னாலே ஓடிவா……
பெண் : அந்தி மலர் பூத்திருக்கு
ஆசை மனம் காத்திருக்கு
முந்தி விடும் முன்னாலே ஓடிவா…….
முந்தி விடும் முன்னாலே ஓடிவா……
இருவர் : அந்தி மலர் பூத்திருக்கு
ஆசை மனம் காத்திருக்கு
முந்தி விடும் முன்னாலே ஓடிவா…….
முந்தி விடும் முன்னாலே ஓடிவா……
ஆண் : கோபுர வாசல் மடியினிலே மடியினிலே
இளம் குமரி உன்னை பார்க்கிறேன் பார்க்கிறேன்
கோபுர வாசல் மடியினிலே மடியினிலே
இளம் குமரி உன்னை பார்க்கிறேன் பார்க்கிறேன்
பெண் : நீ கொடுக்க போகும் வாழ்வை
எண்ணி வாழ்வை எண்ணி
நான் கண் மயங்கி தவிக்கிறேன் தவிக்கிறேன்
நீ கொடுக்க போகும் வாழ்வை
எண்ணி வாழ்வை எண்ணி
நான் கண் மயங்கி தவிக்கிறேன் தவிக்கிறேன்
இருவர் : அந்தி மலர் பூத்திருக்கு
ஆசை மனம் காத்திருக்கு
முந்தி விடும் முன்னாலே ஓடிவா…….
முந்தி விடும் முன்னாலே ஓடிவா……
ஆண் : {ஆடும் விழிகள் திரும்பட்டும்
அழகு தேனை அருந்தட்டும்
ஆடும் நாணம் விலகட்டும்
பருவக் கோலம் பழகட்டும்} (2)
பெண் : அன்பு என்னை ஆளட்டும்
அமைதி அங்கு வாழட்டும்
இன்ப மேகம் பொழியட்டும்
இதயபூமி குளிரட்டும்
பெண் : அன்பு என்னை ஆளட்டும்
அமைதி அங்கு வாழட்டும்
இன்ப மேகம் பொழியட்டும்
இதயபூமி குளிரட்டும்
இருவர் : அந்தி மலர் பூத்திருக்கு
ஆசை மனம் காத்திருக்கு
முந்தி விடும் முன்னாலே ஓடிவா…….
முந்தி விடும் முன்னாலே ஓடிவா……
ஆண் : {குங்கும இதழ்கள் மலரட்டும்
மலரட்டும்
அதில் பொங்கிடும் புன்னகை தவழட்டும்
தவழட்டும்} (2)
பெண் : {ஆ…..மங்கல இசைகள் முழங்கட்டும்
முழங்கட்டும்
எனக்கு மனைவி பெருமை வழங்கட்டும்
வழங்கட்டும்} (2)
இருவர் : அந்தி மலர் பூத்திருக்கு
ஆசை மனம் காத்திருக்கு
முந்தி விடும் முன்னாலே ஓடிவா…….
முந்தி விடும் முன்னாலே ஓடிவா…..