பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
ஆண் : அனிதா அனிதா……
அனிதா……ஆ…….
ஓ….அனிதா……….
அனிதா அனிதா……
ஓ….அனிதா……….
ஆண் : அம்மாடி வந்தேனே தேடி
அருகில் வா நான் உந்தன் ஜோடி
ஆரம்பம் ஆகட்டும் காதலின் நாடகம்
வா வா விரைந்து இங்கே ஹஹஹ்ஹாஹ்
ஹஹஹ்ஹாஹ் ஹஹஹ்ஹாஹ்
பெண் : என்னங்க உங்களைத்தாங்க
எண்ணத்தை சொல்லிட்டு போங்க
ஏங்க ஏங்க ஏன் இன்னும் தாமதம்
வாங்க விரைந்து இங்கே ஹஹஹ்ஹாஹ்
ஹஹஹஹாஹ் ஹஹஹ்ஹாஹ்
பெண் : அணைத்தெடுக்கும் கைகள் ஆலம் விழுதோ
ஆண்மை கொஞ்சும் நேரம் நல்ல பொழுதோ
அணைத்தெடுக்கும் கைகள் ஆலம் விழுதோ
ஆண்மை கொஞ்சும் நேரம் நல்ல பொழுதோ
ஆடிவிட தோணுது மங்கை மனது
ஹரே ராம்……..ஹரே ராம்…….ஹரே………ராம்…..
ஆண் : எத்தனையோ பெண்களிடம் தப்பி வந்தேனே
இன்று உந்தன் கைகளிலே மாட்டிக் கொண்டேனே
எத்தனையோ பெண்களிடம் தப்பி வந்தேனே
இன்று உந்தன் கைகளிலே மாட்டிக் கொண்டேனே
அடங்காத ஆசையெல்லாம் அடக்கப் போறேனே
ஹரே ராம்……..ஹரே ராம்…….ஹரே………ராம்…….
ஆண் : அம்மாடி வந்தேனே தேடி
பெண் : எண்ணத்தை சொல்லிட்டு போங்க
ஆண் : வற்றாத ஊற்றாக நான் மாறுவேன்
வளைந்தோடும் நதியாக நீ மாறுவாய்
வற்றாத ஊற்றாக நான் மாறுவேன்
வளைந்தோடும் நதியாக நீ மாறுவாய்
வாலிபத்தின் கடலில் களித்தாடுவோம்
ஹரே ராம்……..ஹரே ராம்…….ஹரே………ராம்
பெண் : காளையர்க்கு திலகம் என்று பாராட்டவா
காதலுக்கு வேந்தன் என்று பேர் சூட்டவா
காளையர்க்கு திலகம் என்று பாராட்டவா
காதலுக்கு வேந்தன் என்று பேர் சூட்டவா
காலமெல்லாம் உன்னோடு குளிர் காயவா
ஹரே ராம்……..ஹரே ராம்…….ஹரே………ராம்…..
ஆண் : அம்மாடி வந்தேனே தேடி
அருகில் வா நான் உந்தன் ஜோடி
பெண் : ஏங்க ஏங்க ஏன் இன்னும் தாமதம்
வாங்க விரைந்து இங்கே
இருவர் : ஹஹஹ்ஹாஹ்….
ஹஹஹஹாஹ் ஹஹஹ்ஹாஹ்