பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
குழு : …………………
பெண் : அம்மா நீ சந்திரன் அப்பா நீ சூரியன்
ஆகாயம் யாவுமே நம் வீடு ஆகுமே
ஆண் : நீ மேகம் நான் மேகம் விளையாடுவோம்
உயிரோடு உயிர் சேர உறவாடுவோம்
இருவர் : அம்மா நீ சந்திரன் அப்பா நீ சூரியன்
ஆகாயம் யாவுமே நம் வீடு ஆகுமே
ஆண் : என் பிள்ளை பேசும் பேச்சு இசையானது
குழு : லல லல லல லலலா
ஆண் : பூப்போன்ற வார்த்தையெல்லாம் ருசியானது
குழு : லல லல லல லலலா
பெண் : தளிர் கரங்கள் என்னையே தழுவும் பொழுது
எனை மறந்து பாடுதே எனது மனது
ஆண் : என் தோளின் மீது……பொன்னூஞ்சல் ஆடு…..
என் தோளின் மீது ஊஞ்சல் ஆடு ஏ…..ஹே….
பெண் : அம்மா நீ சந்திரன் அப்பா நீ சூரியன்
ஆண் : ஆகாயம் யாவுமே நம் வீடு ஆகுமே
பெண் : நீ மேகம் நான் மேகம் விளையாடுவோம்
ஆண் : உயிரோடு உயிர் சேர உறவாடுவோம்
குழு : …………………
பெண் : அளவான குடும்பம் என்று போராடினேன்
குழு : லல லல லல லலலா
பெண் : இரண்டோடு போதும் என்று வாதாடினேன்
குழு : லல லல லல லலலா
ஆண் : சலனம் உள்ள வேளையில் சபதம் எடுப்பேன்
சபலம் வந்து சேர்ந்ததும் சபதம் உடைப்பேன்
பெண் : என் சேலை ஓரம் எப்போதும் ஈரம்
உன் ஆசை மீறும் போதை ஏறும் ஓஹோ…..ஓ
ஆண் : அம்மா நீ சந்திரன்
பெண் : அப்பா நீ சூரியன்
ஆண் : ஆகாயம் யாவுமே
பெண் : நம் வீடு ஆகுமே
பெண் : நீ மேகம் நான் மேகம் விளையாடுவோம்
ஆண் : உயிரோடு உயிர் சேர உறவாடுவோம்
இருவர் : …………………