பாடகர் : சி. எஸ். ஜெயராமன்
இசையமைப்பாளர் : சி. இராமச்சந்திரா
ஆண் : அம்மா அம்மா என்றே
ஆயிரம் ஆண்டுகள் அழுது புரண்டாலும்
மகனே அன்னை வருவாளோ
உனக்கொரு ஆறுதல் சொல்வாளோ
அன்னை வருவாளோ….
ஆண் : முன்னை தவம் இருந்து
உன்னை முன்னூறு நாள் சுமந்து
முன்னை தவம் இருந்து
உன்னை முன்னூறு நாள் சுமந்து
பொன்னை போலே உன்னை
போற்றி வளர்த்திட்ட அன்னை வருவாளோ…
ஆண் : கொள்ளி இடவும் வகை இல்லை என்றே நீ
கொடுஞ்சிறையில் கலக்கம் கொள்ளாதே
கொள்ளி இடவும் வகை இல்லை என்றே நீ
கொடுஞ்சிறையில் கலக்கம் கொள்ளாதே
அள்ளி இட அரிசி இல்லை என்றால் என்ன
அன்பை சொரிவாய் மகனே……
ஆண் : கண்ணீராலே நீராட்டு
அன்னை தன்னை
மண் மேலே தாலாட்டு
கண்ணீராலே நீராட்டு
அன்னை தன்னை
மண் மேலே தாலாட்டு
நெஞ்ச தணலால் நெருப்பினை மூட்டு
நீ உன் கடமையை நிலை நாட்டு
மகனே அன்னை வருவாளோ
உனக்கொரு ஆறுதல் சொல்வாளோ
அன்னை வருவாளோ….