பாடகி : உமா ரமணன்
இசையமைப்பாளர் : இளையராஜா
கைதட்டல்கள் : ……………………………
பெண் : அலை அலையாய் பல ஆசைகளே
அடி இளமையிலே இந்த இளமையிலே
இரவினில் பூக்கள் பூக்கலாம்
விடிந்ததும் வாடி போகலாம்
பெண் : இடையினில் காலம் மாறலாம்
இளமையும் ஓடி போகலாம்
பிறவியில் நானும் கூட பூவின் ஜாதிதான்
பெண் : அலை அலையாய் பல ஆசைகளே
அடி இளமையிலே இந்த இளமையிலே
கைதட்டல்கள் : ……………………………
பெண் : செவ்வாழை போல் இரண்டு கால் நடக்க
லல்லா லல்லா லல்லா லல்லா
செம்மீனை போல் ரெண்டு கண் சிரிக்க
லல்லா லல்லா லல்லா லல்லா
பெண் : நதிபோல் நானும் நடைதான் போட
கொடி போல் மேலே கனிதான் ஆட
இளகிய மாலை பொழுதினிலே
வாலிபமே வா நான் அழைக்க…….
பெண் : அலை அலையாய் பல ஆசைகளே
அடி இளமையிலே இந்த இளமையிலே
கைதட்டல்கள் : ……………………………
பெண் : ஆகாயம் நீந்துகின்ற பூங்குருவி
லல்லா லல்லா லல்லா லல்லா
அம்மாடி நானும் ஒரு தேனருவி
லல்லா லல்லா லல்லா லல்லா
பெண் : சிறகை நானும் விரிப்பேன் இங்கே
நினைத்தால் போதும் பறப்பேன் அங்கே
பொழுதொரு பாடல் படித்திருப்பேன்
ராத்திரியில் வா நீ ரசிக்க……..
பெண் : அலை அலையாய் பல ஆசைகளே
அடி இளமையிலே இந்த இளமையிலே
இரவினில் பூக்கள் பூக்கலாம்
விடிந்ததும் வாடி போகலாம்
பெண் : இடையினில் காலம் மாறலாம்
இளமையும் ஓடி போகலாம்
பிறவியில் நானும் கூட பூவின் ஜாதிதான்
பெண் : லலலா லா லால்லல லா
லலலா லா லால்லல லா
லால்லல லா லா லல லா
லால்லல லா லா லல லா