அதோ மேக ஊர்வலம் அதோ
மின்னல் தோரணம் அங்கே
இதோ காதல் ஊர்வலம் இதோ காமன்
உட்தவம் இங்கே
ஒரே நாள் நிலவினில் முகம்
பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உனைச்
சேர்த்தேன் வா
(அதோ)
உனது பாதம் அடடட இலவம்
பஞ்சு
நடந்து போக
துடிப்பது எனது நெஞ்சு
இரண்டு வாழைத் தண்டிலே ராஜ
கோபுரம்
நானும் இன்று கேட்கிறேன்
உன்னை ஓர் வரம்
தேகம் தன்னை மூடவே
கூந்தல் போதும் போதுமே
ஆடை என்ன வேண்டுமா நாணம்
என்ன வா வா
(அதோ)
குழலைப் பார்த்து முகிலென
மயில்கள் ஆடும்
முகத்தைப் பார்த்து
அடிக்கடி நிலவு தேயும்
தென்னம்பாண்டி முத்தைப்
போல் தேவி புன்னகை
வந்து ஆடச் சொல்லுமே
செண்டு மல்லிகை
உன்னைச் செய்த பிரம்மனே
உன்னைப் பார்த்து
ஏங்குவான்
காதல் பிச்சை வாங்குவான்
இன்னும் என்ன சொல்ல
(அதோ)