பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
பெண் : அடடா இதுதான் சுகமோ
மலர்களின் இதழ் வழி
பனி மழை விழும் சுகமோ
இனிமேல் தினமும் விழாக் கோலமே
ஆண் : அடடா இதுதான் சுகமோ
மலர்களின் இதழ் வழி
பனி மழை விழும் சுகமோ
இனிமேல் தினமும் விழாக் கோலமே
பெண் : விழிகளும் விழிகளூம் தழுவிடும் பொழுதினில்
ஏதோ ஏதோ லீலைகள்
ஆண் : விரல்களூம் விரல்களும் உரசிடும் பொழுதினில்
காதல் தீயின் ஜுவாலைகள்
பெண் : கன்னங்களில் தாமரை காதல் தூவும்
சின்னங்களின் தேன் மழைச்சாரல் வீசும்
ஆண் : கருங்கூந்தலின் ஊஞ்சலில் பூக்கள் ஆடும்
பெண் : அடடா ஆண் : ஆஹா
பெண் : இதுதான் ஆண் : ஓஹோ ஹோ
பெண் : சுகமோ
ஆண் : மலர்களின் இதழ் வழி
பனி மழை விழும் சுகமோ
இருவர் : இனிமேல் தினமும் விழாக் கோலமே
ஆண் : ஒரு கொடி இடையினில் இரு குடை பிடித்தது
ஏனோ ஏனோ கண்மணி
பெண் : தழுவிடும் இருவரின் நிலவொளி சுடுவது
நேரம் இதோ பவுர்ணமி
ஆண் : நீலோர்பனம் கண்ணிலே ஜாடை காட்டும்
நான் தொட்டதும் குங்குமம் சாயம் தீட்டும்
பெண் : குழல் வீணையின் தந்திகள் எனை மீட்டும்
அடடா இதுதான் சுகமோ……
ஆண் : அடடா பெண் : ஆஹா
ஆண் : இதுதான் பெண் : ஆஹா
ஆண் : சுகமோ
பெண் : மலர்களின் இதழ் வழி
பனி மழை விழும் சுகமோ
இருவர் : இனிமேல் தினமும் விழாக் கோலமே
இருவர் : லல்லாலால லல்லாலால
லல்லாலால லல்லாலால