பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்
மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
குழு : ……………………………….
ஆண் : ஆத்தங்கரை தோப்புக்குள்ள
அந்தி சாயும் நேரத்துல
பாக்கு வெத்தல மாத்திக்கலாம் வாம்மா
அடி ஆத்தங்கர தோப்புக்குள்ள
அந்தி சாயும் நேரத்துல
பாக்கு வெத்தல மாத்திக்கலாம் வாம்மா
பெண் : நான் முதிராத நாத்து மொறைக்காத பாத்து
கொடி மேலே கொரங்காடலாமா……
ஆண் : ஏய்….
பெண் : நான் கனியாத செவ்வாழை மாமா
ஆண் : அடி ஆத்தங்கரை தோப்புக்குள்ள
அந்தி சாயும் நேரத்துல
பாக்கு வெத்தல மாத்திக்கலாம் வாம்மா
ஆண் : நெல்லு வெளைஞ்சா போரடிக்கோணும்
பொண்ணு சமஞ்சா பூ முடிக்கோணும்
பெண் : தண்ணியளவுதான் தாமரப் பூக்கும்
உன்ன நெனச்சுதான் என் மொகம் சிவக்கும்
ஆண் : வைக்கைப்போர் மெத்தையிருக்கு அடி அம்மாடி
வெக்கத்த விட்டு ஒதுங்கு ஹாங்….
பெண் : அதுக்கு உன் கிட்ட மச்சமிருக்கு என் மச்சானே
அச்சம்தான் மிச்சம் இருக்கு
ஆண் : அடி ஆத்தங்கரை தோப்புக்குள்ள
அந்தி சாயும் நேரத்துல
பாக்கு வெத்தல மாத்திக்கலாம் வாம்மா
பெண் : ஹாங்…..நான் முதிராத நாத்து மொறைக்காத பாத்து
கொடி மேலே கொரங்காடலாமா..
ஆண் : ஹாஹ்…
பெண் : நான் கனியாத செவ்வாழ மாமா
பெண் : ஆஅ…..ஆ…..அ……ஆ…..
ஆஅ…..ஆ…..அ……ஆ…..
ஆ…..ஆ……ஆ…..ஆ……ஆ…….
பெண் : கொளத்து நீருல
நான் குளிக்கும் போதிலே
அயிர மீனப் போல் நீ கடிக்க பாக்குற
ஆண் : அடி ஈரச் சேலைய காயப் போடுறே
என் ஆச மனச ஏன் ஆறப் போடுற
ஆண் : அடி சாயாத மலமேல கூந்தல
மாராப்பா போட்டு வெச்ச
பெண் : என் சேலைக்கு நூலாகணும்
அதுக்கு நீ மாலைக்கு நாள் பாக்கணும்
ஆண் : ஆஹ
பெண் : என் சேலைக்கு நூலாகணும்
அதுக்கு நீ மாலைக்கு நாள் பாக்கணும்
ஆண் : அடி ஆத்தங்கரை தோப்புக்குள்ள
அந்தி சாயும் நேரத்துல
பாக்கு வெத்தல மாத்திக்கலாம் வாம்மா
பெண் : ஆஹ நான் முதிராத நாத்து
மொறைக்காத பாத்து
கொடி மேலே கொரங்காடலாமா…..
நான் கனியாத செவ்வாழை மாமா…
இருவர் : னா தன நானா நானா தன நானா நானா
தன நான நானான்ன்னா நானா
தன நனநான்ன நானா…..