பாடகர் : சித் ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : டி. இமான்
ஆண் : ஹேய் ஹே ஹேய் ஹேய் ஏ….
ஹேய் ஹே ஹேய் ஹேய் ஏ….
ஆண் : ஆலங்குருவிகளா
எங்க வாசல் வருவிகளா
ஆலங்குருவிகளா
வாழ சொல்லி தருவிகளா…ஆ…
ஆண் : அன்ப தேட எடுத்தோமே பிறவி
தங்கம் தேடி பறக்காதே குருவி
இது புரிஞ்சா…ஆ…..
ஆண் : கையில் எட்டாத எட்டாத
சந்தோசம் எல்லாம்
உன் வீட்டில் உக்காருமே
கண்ணு கொட்டமா கொட்டாம
கொட்டாரம் போட்டு
திக்காடி முக்காடுமே
ஆண் : ஆலங்குருவிகளா
எங்க வாசல் வருவிகளா
ஆலங்குருவிகளா
வாழ சொல்லி தருவிகளா….ஆ….
ஆண் : ஹோ….ஓஒ…..ஓஒ……ஓ…
நம்மோட முகத்து சாயலுல
முன்னவங்க வாழ்ந்த தடம் இருக்கு
எத்தனை பேரு வந்தாலும்
வாழ்த்துகலாம் வாங்க இடம் இருக்கு
ஆண் : எல்லாமே வேணுங்குற உனக்கு
அதில் காக்கும் குருவிக்கும்
பங்கு இருக்கு
ஏதேதோ கோட்டை இங்கு இடிஞ்சு
அதன் மேல் இப்ப
மரம்தானே முளைச்சு கிடக்கு
ஆண் : அரும்பும் எறும்பும் நம் சொந்தம்
திரும்பும் திசையெல்லாம் ஆனந்தம்
ஆண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஆண் : ஆலங்குருவிகளா
எங்க வாசல் வருவிகளா
ஆலங்குருவிகளா
வாழ சொல்லி தருவிகளா
ஆண் : ஒரு நாளும் மறக்காம நமக்கு
ஒளி வாரி எறைக்காத கிழக்கு
ஆண் : இங்க பொறந்து…..யாரு வந்தாலும்
இல்லேன்னு சொல்லாம பூமி
எல்லாருக்கும் எல்லாம் தரும்
இந்த சின்னூண்டு சின்னூண்டு
பூச்சிக்குங்கூட
பூ பூத்து தேனா தரும்
ஆண் : ரர ரரராராரர ரரராரா ராரா
ரர ரரரார ரார ரா
ரர ரரராராரர ரரராரா ராரா
ரர ரரரார ரார ரா
ஆண் : ஆலங்குருவிகளா ஆஅ….ஆ…..