ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே
கோவை கனி போலே இதழ் கொஞ்சும் என் வானமுதே
பாவை என் நெஞ்சில் புது பண்பாடும் ஆணழகே
கோவை கனி போலே இதழ் கொஞ்சும் என் வானமுதே
பாவை என் நெஞ்சில் புது பண்பாடும் ஆணழகே
இனி வானோடும் காணாத ஆனந்தமே
இனி வானோடும் காணாத ஆனந்தமே
ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே
ரோஜா புது ரோஜா அழகு ரோஜா மலர்தானோ
எழில் வீசும் உன் கன்னங்களோ
வாசம் கொண்டாடும் கண்கள் பாடாத வண்டுகளோ
ரோஜா மலர்தானோ எழில் வீசும் உன் கன்னங்களோ
வாசம் கொண்டாடும் கண்கள் பாடாத வண்டுகளோ
இனி பேசாமல் காண்போம் பேரின்பமே
இனி பேசாமல் காண்போம் பேரின்பமே
ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே