ஜெய் பீம். படத்தினால் ஏற்பட்ட சர்சையினால் வெளிநாட்டுக்கு கிளம்பிய சூர்யா, ஜோதிகா.

ஜெய் பீம். படத்தினால் ஏற்பட்ட சர்சையினால் வெளிநாட்டுக்கு கிளம்பிய சூர்யா, ஜோதிகா.

சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் தான் ஜெய் பீம். இந்த படத்தினால் ஏற்பட்ட பிரச்சனைகள் தாங்காமல் சூர்யா தற்போது வெளிநாட்டுக்கு சென்று விட்டதாக ஒரு தகவல் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய் பீம் திரைப்படம் இருளர் மக்களின் வாழ்க்கையை வெளிக்காட்டும் விதமாக இருந்தாலும் வன்னியர் சமூகத்தினர் தாக்கும்படி காட்சிகள் வைக்கப்பட்டதாக அந்த சமூகத்தினர் கொந்தளித்து சூர்யாவை தாக்கிப் பேசி வருகின்றனர். காலண்டரில் ஆரம்பித்த பஞ்சாயத்து காலால் எட்டி உதைக்கும் அளவுக்கு வந்துவிட்டது.

வெளியில் கொடுக்கும் பேட்டிகளில் பகிரங்கமாகவே சூர்யாவை எத்தி வைத்தால் ஒரு லட்சம் பரிசு தருவதாகக் கூறி வருகின்றனர். இதனால் கடந்த சில வாரங்களாக சூரியாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சூர்யா கொடுத்த விளக்கமும் அந்த சமூகத்தினரை திருப்தி அடைய வைக்க வில்லை. தற்போது சூர்யா குடும்பத்தினருடன் துபாய்க்குச் சென்று விட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. பிரச்சனை எல்லாம் முடிந்த பிறகு திரும்பி வரலாம் என முடிவெடுத்துள்ளாராம்.

ஆனால் சூர்யா மற்றும் ஜோதிகா மீது மூன்று பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டு உள்ளதால் கண்டிப்பாக அவர்கள் நீதிமன்றம் வரவேண்டியிருக்கும். அப்படி வரும் போது எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதே ரசிகர்களின் வேண்டுதலாக இருக்கிறது.

சூர்யா அடுத்தடுத்து எதற்கும் துணிந்தவன் பாலாவுடன் ஒரு படம் என பிஸியாகி வருகிறார். ஏற்கனவே ஓட்டி டிவியில் வெளியாகும் சூர்யா படங்கள் தியேட்டரில் வெளியானால் தியேட்டரை அடித்து நொறுக்குவோம் என்கிற அளவுக்கு பிரச்சனைகள் வந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் படம் எப்படி தியேட்டரில் வெளியாகப் போகிறது? என்பதுதான் எதிர்பார்ப்பாகவும் கேள்வியாகவும் இருக்கிறது.