இந்த 3 உணவை சாப்பிடுங்கள் உங்கள் வாழ்நாளில் இனி குறட்டை பிரச்சனை வராது.

 0  231
இந்த 3 உணவை சாப்பிடுங்கள் உங்கள் வாழ்நாளில் இனி குறட்டை பிரச்சனை வராது.

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, மூக்கு மற்றும் தொண்டையின் வழியாக எளிதில் காற்று செல்ல முடியாமல் தடைபடுவதால், ஏற்படும் சப்தத்தை தான் குறட்டை என்கிறோம்.

இது ஒரு வகை சுவாசக் கோளாறு பிரச்சனை என்பதால் இதற்கு உடனடி தீர்வு காண்பது சிறந்தது. எனவே இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வினை கொடுக்கும் உணவுகள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.

புதினா
  • குறட்டை பிரச்சனை இருப்பவர்கள், தினமும் 2 கப் புதினா டீ குடித்து வந்தால், நல்ல தீர்வு கிடைக்கும். அதுவும் இரவு தூங்குவதற்கும் 1/2 மணிநேரத்திற்கு முன் ஒரு டம்ளர் புதினா டீ குடித்தால், சிறப்பான பலனைப் பெறலாம்.
  • இல்லையெனில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், சிறிது புதினா எண்ணெய் சேர்த்து கலந்து, இரவு தூங்குவதற்கு முன் வாயைக் கொப்பளித்து வந்தாலும், குறட்டை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
ஆலிவ் ஆயில்
  • ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து, தேவைபட்டால், அதனுடன் சிறிது இஞ்சி சாற்றினை சேர்த்து, இரவு தூங்குவதற்கும் 1/2 மணிநேரத்திற்கு முன் குடிக்க வேண்டும்.
ஏலக்காய்
  • தூங்குவதற்கு முன் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு சிறிது நேரம் மென்று சாப்பிடலாம் அல்லது ஒரு டம்ளர் நீரில் ஏலக்காயை தட்டிப் போட்டு, சிறிது பட்டை மற்றும் தேன் சேர்த்து கலந்து, கூட குடித்து வரலாம்.
குறட்டை பிரச்சனையை தடுக்கும் வேறு சில வழிகள்?
  • உறங்கும் போது பக்கவாட்டில் படுத்துக் கொண்டால் குறட்டை ஏற்படுவதை தடுக்கலாம்.
  • இரவில் உறங்குவதற்கு முன் சிறிது நேரம் சுநீரில் ஆவிப்பிடித்தால் குறட்டை வருவதை தவிர்க்கலாம். ஏனெனில் அது மூக்கில் உள்ள அடைப்புக்களை நீக்கி, காற்று எளிதாக செல்ல வழிவகுக்கும்.
  • புகைப்பிடிக்கும் போது, அது தொண்டையில் புண் மற்றும் வீக்கங்களை உருவாக்குவதால், அது மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்தி குறட்டை பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே புகைப்பிடித்தல் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.
  • மது அருந்துவது, தூக்க மாத்திரைகளை உட்கொள்வது போன்ற பழக்கங்களை நிறுத்தினால், அது தசைகளை தளர்வடையச் செய்து, காற்றை எளிதாக செல்ல உதவும் எனவே இதனால் குறட்டை பிரச்சனைகள் ஏற்படாது.
  • சளி அல்லது ஜலதோஷம் பிடித்தால், அதற்கு சரியான சிகிச்சை பெற்று வந்தால், உறங்கும் போது குறட்டை ஏற்படுவதை தவிர்க்கலாம்.
  • இரவில் தூங்கும் முன் பிட்சா, பர்கர் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது சளி பிரச்சனையை ஏற்படுத்துவதுடன் குறட்டை பிரச்சனையையும் உண்டாக்கும்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow