சர்க்கரை நோய் உள்ளவர்கள் உண்ணுவதற்கு ஏற்ற பழங்கள்.

Sep 7, 2021 - 08:55
 0  242
சர்க்கரை நோய் உள்ளவர்கள் உண்ணுவதற்கு ஏற்ற பழங்கள்.

நீரிழிவு நோயாளிகள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளலாம். இப்போது நீரிழிவு நோயாளிகள் பயமின்றி நிம்மதியாக சாப்பிடக்கூடிய சில பழங்களைப் பார்ப்போம்.

கிவி பழம் நீரிழிவு நோயாளிகளுக்கான ஒரு சிறந்த பழம். ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். கொய்யாப்பழம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும். அதுமட்டுமின்றி, கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சில அதிக அளவிலும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் நிறைந்துள்ளது.

நாவல் பழம் கிராமப்பகுதிகளில் அதிகம் கிடைக்கும் இந்த பழம், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழம். ஏனெனில் இதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு விரைவில் கட்டுப்படும். அதுமட்டுமின்றி, இதன் கொட்டையை பொடி செய்து சாப்பிட்டால், இன்னும் சிறந்த பலனைக் காண முடியும்.

ஆப்பிள் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். இது நீரிழிவு நோயாளிகளுக்கும் தான். ஏனெனில் ஆப்பிள் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இது செரிமான மண்டலம், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பேரிக்காயில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும். அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக் கொள்ள உதவும். அதிலும் இதனை தினமும் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

மாதுளை அழகான சிவப்பு நிறத்தில் உள்ள மணிகளைக் கொண்ட மாதுளையும் நீரிழிவு நோயாளிகள் தைரியமாக சாப்பிடக்கூடிய பழங்களுள் ஒன்று. ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். நட்சத்திரப் பழம் இந்த பழமும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற, இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும் பழமாகும். ஆனால் அளவாக சாப்பிட வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow