Tamil to Tamil Dictionary Search
Meaning of நா
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word நா
| நா - ஓர் உயிர்மெய்யெழுத்து(ந்+ஆ) ; சொல் ; நடு ; மணி முதலியவற்றின் நாக்கு ; தீயின் சுடர் ; திறவுகோலின் நாக்கு ; நாகசுரத்தின் ஊதுவாய் ; துலைநாக்கு ; அயல் ; பொலிவு . |
| அடிநா - நாவின் அடி ; உள்நாக்கு . |
| இருநா - பிளவுபட்ட நாக்கையுடையது ; உடும்பு ; பாம்பு . |
| ஈரநா - புறங்கூறும் நாக்கு . |
| எழுநா - ஏழு நாக்கு ; ஏழு நாவையுடையதாகிய அக்கினி , நெருப்பு ; கொடிவேலி . |
| கவைநா - பிளவுண்ட நாவுடைய பாம்பு ; உடும்பு . |
| கெசாசைநா - கையாந்தகரைப்பூடு . |
| தராசுநா - காண்க : தராசுமுள் . |
| திசைநா - கொடிவேலிமரம் . |
| தீநா - தீச்சுடர் ; கப்பல்களுக்குத் திசை தெரிவிக்கப் பனைகளைக் காலாக நாட்டி அதன்மீது மண் இட்டு எரிக்கும் விளக்கு ; கப்பற்காரர் துறையறியக் கொளுத்தும் தீப்பந்தம் ; கலங்கரைவிளக்கம் . |
| துலைநா - தராசுமுள் . |
| நுனிநா - நாக்கின் நுனி . |
| மணிநா - மணியின் நாக்கு . |