Tamil to Tamil Dictionary Search
Meaning of உ
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word உ
| உ - ஐந்தாம் உயிரெழுத்து ; இரண்டு என்னும் எண்ணின் குறி ; சுட்டெழுத்துள் ஒன்று ; பின் , மேல் முதலிய மறைவிடங்களைக் காட்டும் ஒரு சுட்டு ; சிவபிரான் ; நான்முகன் ; உமையவள் ; ஓர் இடைச்சொல் ; ஒரு சாரியை ; தொழிற்பெயர் விகுதியுள் ஒன்று ; பண்புப் பெயர் விகுதியுள் ஒன்று |
| அழிதூஉ - அலி . |
| ஆடூஉ - ஆண்மகன் . |
| இகூஉ - (வி) இகுத்து ,வீழ்த்தி . |
| ஒரூஉ - ஒருவு ; நீங்குகை ; செய்யுளடியில் முதற்சீரிலும் மோனை முதலியன அமையும் தொடை . |
| கழிகல மகடூஉ - காண்க : கலன்கழி மடந்தை . |
| குழூஉ - கூட்டம் . |
| செவியறிவுறூஉ - அரசர் முதலியோர்க்குச் செவிக்கண் நிற்கக் கூறும் நீதி ; அரசர்க்கு நல்லறிவு புகட்டுதலைக் கூறும் புறத்துறை ; ஒரு நூல்வகை . |
| தழூஉ - அணைப்பு ; மகளிராடும் குரவைக்கூத்து . |
| பரூஉ - பருமை ; பரித்தல் ; மிகுதிப்படுகை . |
| பழூஉ - பேய் . |
| பாடன்மகடூஉ - விறலி . |
| மகடூஉ - பெண் ; மனைவி . |
| மரூஉ - நட்பு ; இயல்புவழக்கு மூன்றனுள் இலக்கணம் சிதைந்து மருவி வழங்கும் சொல் . |
| வழூஉ - காண்க : வழுவு . |
| வெரூஉ - அச்சம் . |