பாம்பு கடிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நடிகர் சல்மான் கானின்.

பாம்பு கடிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நடிகர் சல்மான் கானின்.

நடிகர் சல்மான்கானை பாலிவுட் சினிமாவில் அறியாதவர்கள் யாரும் இல்லை.  பாலிவுட் சினிமாவில் பெரிய அளவில் கொண்டாடும் ஒரு பிரபலம்.

56 வயதாகும் நடிகர் சல்மான் கானுக்கு இன்று பிறந்தநாள், வழக்கம் போல் ரசிகர்கள் பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் கொஞ்சம் சோகத்துடன் தான் பிறந்தநாள் வாழ்த்து கூறுகிறார்கள்.

காரணம் நேற்றைய தினம் சல்மான் கான் தனது தோட்டத்தில் சில வேலைகள் செய்துள்ளார். அப்போது எதிர்ப்பாராத விதமாக அவரை ஒரு பாம்பு கடித்துள்ளது. உடனே அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட சிகிச்சை பெற்று வந்தார்.

சல்மானின் தந்தை சலிம் கான் அவரைப்பற்றி கூறுகையில், விஷம் அவ்வளவாக இல்லாத பாம்பு, காலை உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டோம்.

இப்போது அவர் குணமாக இருக்கிறார் என தெரிவித்துள்ளார். இதோ மருத்துவமனையில் இருந்து வெளிவந்த சல்மானின் புகைப்படம்,