மாநாடு படத்தின் வில்லன் தனுஷ்கோடி பெயர் சர்ச்சை.

 0  91
மாநாடு படத்தின் வில்லன் தனுஷ்கோடி பெயர் சர்ச்சை.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்து திரைக்கு வந்துள்ள படம் மாநாடு. வெற்றிகரமாக ஓடிக்கொண்டி ருக்கும் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள எஸ்.ஜே. சூர்யாவின் கேரக்டருக்கு தனுஷ்கோடி என்று பெயர் வைத்துள்ளார் வெங்கட்பிரபு. இதற்கு தனுஷின் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதனால் சிம்புவை ஹீரோவாகவும், தனுஷை வில்லனாகவும் சித்தரிக்க வேண்டும் என்பதற்காக வில்லனுக்கு தனுஷ்கோடி என்று பெயர் வைத்திருக்கிறார் வெங்கட்பிரபு என்று தனுஷ் ரசிகர்கள் ஆட்சேபனை தெரிவித்து வருகிறார்கள். அதோடு, சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தில் நீ அழிக்கிறதுல அசுரன்னா நான் காக்கிறதுல ஈஸ்வரன் என்று பஞ்ச் டயலாக் பேசியிருந்தார். அதனால் இந்த படத்திலும் திட்டமிட்டே தனுசுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக வில்லனுக்கு இப்படியொரு பெயர் வைக்க சொல்லியிருக்கிறார் சிம்பு என்பது போன்றும் தனுஷின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் சர்ச்சையாக்கி வருகின்றனர்.

இதையடுத்து மாநாடு டைரக்டர் வெங்கட்பிரபு தான் அளித்த ஒரு பேட்டியில் அதற்கு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், மாநாடு படத்தின் வில்லன் பெயர் வலிமையானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அப்படி வைத்தோம். ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் சிம்பு, தனுஷ் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அதனால் அந்த பெயரை வைத்தால் இயல்பாகவே வில்லன் கேரக்டருக்கு ஒரு பவர் வந்து விடும் என்பதற்காகவே அப்படி வைத்தேன். அதோடு, இந்த தனுஷ்கோடி என்ற பெயரை கேட்டதும் கண்டிப்பாக தனுஷ் சந்தோசப்பட்டிருப்பார் என்றும் தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow