ரசகுல்லா & ரசமலாய்

ரசகுல்லா & ரசமலாய்

தேவையான பொருட்கள் 

பால் - ஒரு லிட்டர்
சர்க்கரை - ஒரு கப்
வினிகர் - ஒரு தேக்கரண்டி
ரசமலாய் செய்ய :
பால் - அரை லிட்டர்
சர்க்கரை - அரை கப்
ஏலக்காய், பிஸ்தா, பாதாம்

 செய்முறை 

பாலை காய்ச்சி வினிகர் விட்டு திரிய விடவும்.

திரிந்த பாலை மெல்லிய துணியில் வடிக்கட்டி குளிர்ந்த நீரில் அலசி ஆறவிட்டு தண்ணீர் இல்லாமல் பிழியவும்.

பனீரை நன்கு கட்டி இல்லாமல் தேய்த்து பிசையவும். விரல்களால் மட்டுமே மென்மையாக தேய்க்கவும்.

பனீரில் கால் தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து தேய்த்து பிசைந்து விரும்பிய அளவில் உருட்டிக் கொள்ளவும்.

கடாயில் சர்க்கரை சேர்த்து 2 மடங்கு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொதித்ததும் உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.

கொதித்து மிதந்து மேலே வரும் பொழுது லேசாக திருப்பி விட்டு மூடி 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வேக விடவும்.

உருண்டைகள் இரண்டு மடங்கு பெரிதாகி வெந்ததும் இறக்கவும் அதே சர்க்கரை பாகில் சிறிது நேரம் ஊற விட்டு பரிமாறவும்

ரசமலாய் செய்ய பாலை கொதிக்க விட்டு சர்க்கரை சேர்த்து நன்கு சுண்டும் வரை காய்ச்சவும். கலருக்கு குங்கமப்பூ அல்லது கலர் பவுடர் சேர்க்கவும். ரசகுல்லாவை லேசாக பிழிந்து ஒரு முறை தண்ணீரில் தோய்த்து பிழிந்து காய்ச்சிய பாலில் சேர்க்கவும்.

ஊறவிட்டு பாதாம் மற்றும் பிஸ்தாவை பொடியாக நறுக்கி மேலே தூவி பரிமாறவும யம்மி ரசகுல்லா மற்றும் ரசமலாய் தயார்.