மாடித் தோட்டம் கொத்தமல்லிக் கீரை பயிரிடும் முறை

Mar 15, 2022 - 00:00
 0  79
மாடித் தோட்டம் கொத்தமல்லிக் கீரை பயிரிடும் முறை

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் கொத்தமல்லிக் கீரை பயிரிடும் முறையை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்
  1. Grow Bags அல்லது Thotti
  2. அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.
  3. விதைகள்
  4. பூவாளி தெளிப்பான்

தொட்டிகள்

தொட்டி அல்லது பைகளுக்கு அளவு, வடிவம் என்று எதுவும் தேவைப்படாது. அதனால் பிளாஸ்டிக், மண்பானை, உலோகம், செராமிக் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கீரைகள் வளர்ப்பதற்காக பைகளில் நிரப்பும்போது, அரை அடி ஆழத்திற்கு மேல் மண் நிரப்பினால் போதுமானது.

இதில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும்.

விதைத்தல்

கொத்தமல்லி விதைகளை பைகளில் தூவி கிளறி விட வேண்டும். அதில் நிரப்பியுள்ள கலவையை கொண்டு மெல்லிய போர்வை போல் அமைக்க வேண்டும். கொத்தமல்லி விதைகளை இரண்டாக உடைத்து தான் விதைக்க வேண்டும். இல்லையெனில் விதைகள் முளைக்காது.

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

உரங்கள்

பூச்சிகளிடமிருந்து காக்க அடுப்பங்கரை குப்பை மற்றும் பஞ்சகாவ்யா போதுமானது. டீத்தூள், முட்டை ஓடு, மக்கிய காய்கறி கழிவுகளை உரமாக போடலாம்.

பஞ்சகாவ்யா 10 மில்லியை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

அதிகளவு வெய்யில் படுவதால் கீரைகள் வாடி விடும். இதை ஈடுகட்ட கீரை வளர்க்கும் பகுதியைச் சுற்றிலும் வலை அமைக்கலாம். இல்லையெனில் சிறிது நிழல் விழும் இடத்தில் வைக்கலாம்.

அறுவடை

நன்கு திரண்ட பழங்களை இரு நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும்.

பயன்கள்:
  • இதில் விட்டமின் ‘A’ சத்து உள்ளதால், கண் பார்வை தெளிவாகிறது. விட்டமின் ‘C’ சத்தும் இந்த கீரையில் அதிகம் உள்ளதால் உடலில் ஏற்படக்கூடிய சொறி, சிரங்கு, அரிப்பு போன்ற தோல் நோய்களை குணமாக்கும் தன்மை உள்ளது.
  • இது ஜீரணத்தை தூண்டுகிறது. வாந்தி மற்றும் விக்கலை தடுக்கிறது.
  • கொத்தமல்லி சாற்றில் கருஞ்சீரகத்தை ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் ஒரு கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனைகள் குணமாகும்.
  • எலும்புகள், பற்கள் ஆகியவற்றிற்கு தேவையான கால்சியம் சத்து இதில் உள்ளது. நோயாளிகளுக்கு நாக்கு ருசி மாறி, வாய்க் கசப்புத்தன்மை ஏற்பட்டுவிடும். அவர்கள் இந்தக்கீரையை துவையல் செய்து சாப்பிட்டால், நாக்கு ருசி பழைய நிலைக்கு வந்துவிடும்.
  • சொறி, சிரங்கு, அரிப்பு உள்ளவர்கள் கீரை 50 கிராம், வெந்தயம் 10 கிராம், மிளகு 5 கிராம் எடுத்துக்கொண்டு இவற்றுடன் எலுமிச்சை சாறு தேவையான அளவு இட்டு அரைத்து புண்கள் மேல் தடவி வர விரைவில் குணமாகும்.
  • உடல் சூட்டைக் குறைக்க கொத்தமல்லியை ஒரு கைபிடி எடுத்து நன்கு கழுவி மென்று சாப்பிட்டு வர உடல் சூடு குறையும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow