மாடித்தோட்டத்தில் தானியக்கீரை பயிரிடும் முறை

Feb 5, 2023 - 00:00
 0  28
மாடித்தோட்டத்தில் தானியக்கீரை பயிரிடும் முறை

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் தானியக்கீரை பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்
  • Grow Bags அல்லது Thotti
  • அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா, வேப்பந்தூள்.
  • விதைகள்
  • பூவாளி தெளிப்பான்

தொட்டிகள்

தேர்வு செய்த தொட்டி அல்லது பைகளில் அடியுரமாக மண், இயற்கை உரம், தென்னை நார்க்கழிவு ஆகியவற்றை சம அளவு கொண்டு தொட்டியை நிரப்பி ஆற விட வேண்டும். பைகளில் உரங்களை நிரப்பும் பொழுது, ஒரு அடி ஆழத்திற்கு மேல் நிரப்ப வேண்டும்.

விதைத்தல்

விதைகளுடன் இரண்டு அளவு மணல் கலந்து தொட்டியில் அல்லது பைகளில் சீராக விதைக்க வேண்டும். விதைத்தவுடன் கலவை கொண்டு மெல்லிய போர்வை போல் அமைக்க வேண்டும். செய்திதாள்களை கொண்டு விதைகளை மூட வேண்டும். விதைகள் முளைத்தவுடன் செய்திதாள்களை நீக்கி விட வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைகளை விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

உரங்கள்

சமையலறைக் கழிவுகளை மக்கச்செய்து உரமாக போடலாம். வாரம் ஒருமுறை மண்ணை கிளறி விட்டு ஒரு கையளவு மண்புழு உரத்தை இடலாம்.

தண்ணீருடன் பஞ்சகாவ்யாவை கலந்து ஊற்ற வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

இலைகளில் பூச்சி தாக்குதல் காணப்பட்டால் வேப்பந்தூளை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். இது சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படும்.

அறுவடை

கீரையாக 30 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும்.

பயன்கள்:
  • இதன் விதைகளில் ஆல்புமின், குளோபுலின், புரோலமைகள், ஐசோலுசைகள் மற்றும் லைசின் போன்ற அமிலங்கள் இருப்பதால் இத்தானியத்தின் மாவினை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவாகக் கொடுக்கலாம்.
  • இக்கீரையில் வைட்டமின் ஏ மற்றும் புரோட்டின் அதிகமாக உள்ளது.
  • தானியக்கீரையில் 60 சதம் கார்போஹைட்ரேட் இருப்பதால் மருந்து தயாரிக்கப்படும் தொழிற்சாலைகளில் மிகவும் பயன்படுகிறது.
  • இதன் தண்டு பசுமையாக இருக்கும் போது உணவாகவும் மற்றும் காய்ந்த பின் எரிபொருளாகவும் பயன்படுகிறது. கால்நடைத் தீவனமாக பசுமையான தண்டைப் பயன்படுத்தலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow