பசுந்தாள் உரம் தயாரிக்கும் முறை

Jul 5, 2023 - 00:00
 0  95
பசுந்தாள் உரம் தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்

பயிர்களின் வளர்ச்சி மற்றும் நல்ல மகசூல் பெற ஊக்கசத்துவாக அமிர்தகரைசல் பயன்படுகிறது. எவ்வாறு தயார்செய்வது என்று இங்கு காணலாம்

நாட்டுப்பசு சாணம் – 10 கிலோ

நாட்டுப்பசு கோமையம் – 10 லிட்டர்

கருப்பட்டி (அ) கருப்பு வெல்லம் – 250 கிராம்

தண்ணீர் – 200 லிட்டர்

தயாரிக்கும் முறை

முதலில் சாணம் மற்றும் நாட்டுப்பசு கோமையம் (பசு சாணம் புதியதாக இருந்தல் அவசியம், கோமையம் பழையதாக இருந்தால் வீரியம் அதிகமாக இருக்கும்) இவற்றை ஒரு வாளியில் (அ) ஏதாவது ஒரு கலனில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதில் குறிப்பிட்ட அளவு வெல்லம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

இந்த கலவையை 24 மணி நேரம் நிழலான இடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட கரைசலே அமிர்த கரைசல் ஆகும்.

நன்மைகள்
  • ஒரு பங்கு அமுதக்கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்துப் பயிர்களுக்குத் தெளிக்கலாம். வாய்க்கால் நீரிலும் கலந்து விடலாம்.
  • இதை நிலத்தில் தெளித்ததும், 24 மணி நேரத்தில் நுண்ணுயிரிகள் பெருகும்.
  • பயிர்கள் நோய், நொடியில்லாமல் வளர உதவும்.
  • பொதுவாக 15 நாட்களுக்கு ஒரு தடவை இந்தக் கரைசலைக் கொடுக்கலாம். பயிர்கள் மிகவும் வாட்டமாக காணப்பட்டால் வாரம் ஒரு முறை கூட கொடுக்கலாம்.
  • தண்ணீர் பாய்ச்சும் போதெல்லாம் பாசன நீருடன் கலந்துவிடலாம். இதனால் பயிர்களின் வளர்ச்சி சீராக இருக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow