புற்றுநோயைத் தடுக்க உதவும் பப்பாளி

Dec 29, 2022 - 00:00
 0  33
புற்றுநோயைத் தடுக்க உதவும் பப்பாளி

அனைத்து சீசன்களிலும் கிடைக்கக் கூடிய ஓர் அற்புதமான பழம் பப்பாளி. சருமத்தை அழகுபடுத்தும் குணத்தைத் தாண்டி பப்பாளிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. ஊட்டச்சத்துகள் நிறைந்த பப்பாளிப் பழத்தை ஒருவர் தங்களின் அன்றாட உணவில் சேர்த்து வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.முக்கியமாக பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதனின் சத்துகளை முழுமையாக பெற முடியும். நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு பப்பாளி மருந்தாக அமைகிறது.

பப்பாளியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ்(ANTI OXIDANTS), புற்றுநோயை உண்டாக்கும் செல்களை எதிர்த்துப் போராட உதவும். இதில் இருக்கும் டயட்டரி நார்ச்சத்துக்கள் குடலில் உள்ள புற்றுநோய் செல்கள் மற்றும் கார்சினோஜெனிக் செல்களை உடலில் இருந்து வெளியேற்றும் மேலும் இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தடுக்கும். பப்பாளியில் உள்ள நார்சத்து மனித உடலில் செரிமானத்தை சீரக்கி, மலச்சிக்கல் வராமல் இருக்க உதவும் பப்பாளி விதையை பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வர அதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ்(ANTI OXIDANTS) இதய நோய், சர்க்கரை நோய், பக்கவாதம் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது.

பப்பாளியில் உள்ள பொட்டாசியம் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும். உயர் இரத்த அழுத்தம்(High Blood Pressure) கொண்டவர்கள், பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம் மேலும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். குறைந்த கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள பப்பாளியை வெறும் வயிற்றில் உட்கொண்டால் உடல் எடை வெகுவாக குறையும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள பப்பாளியில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்க உதவும் பப்பாளி ஆண்களுக்கு மிகச்சிறந்த பழம்.

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும். நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வாய்வு, நெஞ்சுஎரிச்சல், அல்சர், சர்க்கரைவியாதி மற்றும் கண்பார்வை கோளாறுகளுக்கு பப்பாளி ஒரு சிறந்த மருந்தாகும்.

100கிராம் பப்பாளிப் பழத்தில் 57மி.கிராம் வைட்டமின் சி உள்ளது. 100 கி ராம் பப்பாளிப்பழத்தில் வெறும் 32கிலோ கலோரி ஆற்றலே கிடைக்கிறது. எனவே இது குண்டானவர்களும், எடையை குறைக்க விரும்புபவர்களும் விரும்பி இந்த பழத்தை சாப்பிடலாம்.

பப்பாளியில் இருக்கும் பலவித பண்புகளோடு, புற்றுநோயை குணப்படுத்தும் பொருளும் இருக்கிறது. இந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்து, புற்றுநோய் உண்டாக்கும் டாக்ஸின்களை உடலில் இருந்து முற்றிலும் வெளியேற்றி, வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

ஆண்களின் இனப்பெருக்க உறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.ஆண்கள் தினமும் பப்பாளியை சாப்பிட்டு வந்தால், விரைப்புத்தன்மை பிரச்சனை நீங்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow