தென்னை மரம் (Coconut Tree)
தென்னை மரமானது நல்ல நீர் வளமும், சூரிய சக்தியும் கிடைக்கும் பகுதிகளில் அதிகமாக வளரும் தன்மையுடையது. 100 கும் மேற்பட்ட நாடுகளில் இப்பொழுதும் தென்னை பயிரிடப்பட்டு வருகிறது.
உலக அளவில் தேங்காய் உற்பத்தியில் பிலிபைன்ஸ் நாடு முதலிடம் வகிக்கிறது. தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பழம் தான் தேங்காய் என்று அழைக்கப்படுகிறது.
தென்னை மரம் அதிகபட்சமாக 30 மீட்டர் வரை கிளைகள் இல்லாமல் செங்குத்தாக வளரும். இந்தியாவில் அதிக அளவு தேங்காய் சாகுபடியில் கேரளா மாநிலம் முதலிடம் வகிக்கிறது. தென் இந்திய உணவு வகைகளில் தேங்காய்க்கு தனி இடம் உண்டு. அதிக அளவு இந்திய சமையல்களில் பயன்படுத்தப்படுகிறது. சமையல்கள் மட்டுமில்லாமல் சுப நிகழ்ச்சிகளிலும், பூஜைகளிலும் தேங்காய் பிரதான பொருளாக பார்க்கப்படுகிறது.
தேங்காய் இளசாக இருக்கும் பொழுது இளநீர் என்று அழைக்கப்படும். அதனுள் தேங்காய் நீர் நிறைந்து காணப்படும். வெயில் காலங்களில் வெயிலுக்கு இதமாக இருக்க இளநீர் பயன் படுகிறது.
அதிக அளவு முற்றிய பின் அதனுள் இருக்கும் நீர் வறண்ட பின் அதனை கொப்பரை தேங்காய் என்று அழைப்பர். அதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உனக்கு சமைப்பதற்கும், தலைமுடி வறண்டு போகாமல் இருப்பதற்கும் பயன்படுகிறது.
தேங்காய் எண்ணெய் எடுத்த பின்பு மீதமிருக்கும் கழிவு கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்த படுகிறது.
பயிரிடும் முறை:
- டிசம்பர் – ஜனவரி, ஜூன் – ஜூலை மாதங்கள் தேங்காய் செடி நடவுக்கு உகந்த காலங்கள் ஆகும்.
- செம்மண், வண்டல்மண் தேங்காய் உற்பத்திக்கு சிறந்த மண் வகைகள் ஆகும். அமில கார தன்மையின் அளவு 5.5 முதல் 8.5 என்ற அளவுகளில் இருத்தல் அவசியம்.
- குறைந்தது 3 அடி ஆழமும் 3 அடி அகலமும் கொண்ட குழிகளை தோண்ட வேண்டும். ஒவ்வொரு குழியும் 15 அடி தொலைவில் அமைக்க வேண்டும். அதில் 1 அடி மணல் நிரப்ப வேண்டும், 1 அடி இலை தழையும், மீதமுள்ள 1 அடிக்கு தொழு உரமும் நிரப்பி நீர் பாய்ச்ச வேண்டும். ஒரு மாதம் கழித்த பின்பு அந்த குழியின் ஆழம் 1.5 அடியாக இருக்கும். அதில் தென்னங்கன்றுகளை வைத்து மண் நிரப்பி நீர் பாய்ச்ச வேண்டும். வண்டுகள் வேரை அரிக்காமல் இருக்க வேப்பம் புண்ணாக்கு சேர்க்க வேண்டும்.
- பின்பு பூக்கள் பூக்கும் வரை அதாவது நட்டு 3 ஆண்டுகள் வரை வாரத்திற்கு ஒருநாள் நீர் பாய்ச்சினால் போதுமானது. அதன்பின்பு பூத்து காய் வைக்கும் பொழுது அதிக அளவு தண்ணீர் தேவைப்படும்.
- பின்பு ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் 5 கிலோ தொழு உரம் வைத்து நீர் பாய்ச்சினால் நல்ல பலன் கிடைக்கும். ஆட்டு சாணம் பயன்படுத்தும் பொழுது பூக்கள் நன்கு பூத்து காய் காய்க்கும். பூக்கள் உதிராது.
- சொட்டு நீர் பாசனம் தென்னை மரத்திற்கு சிறந்தது, இதன் மூலம் சீரான நீரோட்டம் இருப்பதால் காய்களின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். சாகுபடியும் அதிகமாக இருக்கும்.
- நல்ல முறையில் பராமரித்தால் 60 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். தென்னை மரங்கள் நன்கு வளர்ந்த பின் தென்னை மரங்களுக்கு நடுவே ஊடுபயிராக நிலக்கடலை, மஞ்சள்,இஞ்சி போன்ற குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்யலாம்.
தென்னையின் பயன்கள்:
- அன்றாட உணவில் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் சமையலுக்கும், தலைமுடியை வராய்ச்சியிலிருந்து பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
- குடலில் உள்ள புழுக்களை அழிக்கும் சக்தி இளநீருக்கு உண்டு. காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதினால் புழுக்கள் அழிவதுடன் குடல் நோய்களும் குணமாகும்.
- காலரா, மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளநீர் கொடுப்பதினால் நல்ல சத்து மற்றும் ஆற்றல் கிடைக்கும்.
- இளநீர் மிகவும் தூய்மையானது, எனவே அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு உடனடி ஆற்றலுக்கு இளநீரை நரம்புகளில் செலுத்தலாம். அந்த அளவுக்கு இளநீர் சிறப்பு வாய்ந்தது.
தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.
What's Your Reaction?