கோகோ சாகுபடி முறை மற்றும் பயன்கள்

Feb 3, 2022 - 00:00
 0  40
கோகோ சாகுபடி முறை மற்றும் பயன்கள்

தியோபிரமா கோகோ என்கிற தாவரவியல் பெயரைக் கொண்டுள்ள கோகோ பயிரானது, ஸ்டெர்குலியேஸி குடும்பத்தைச் சார்ந்தது.

கோகோ தென் அமெரிக்கா நாட்டின் அமேசான் ஆற்றுப் படுகையை தாயகமாக கொண்டது.

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன், அதாவது சுமார் கி.மு 2000 ல் கோகோ மரங்கள் வளர்க்கப்பட்டதாக ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது. கோகோ மரத்தை கேட்ஸால்கோயாட்டெல் கடவுள் சொர்க்கத்தில் இருந்து கொண்டு வந்தார் என்று மாயர்கள் நம்பினார்கள். கோகோ கடவுள்களின் உணவு என்றும் அழைக்கப்பட்டது.

உலகளவில் கோகோவானது சாக்லெட், உணவுப் பொருட்கள், சுவை மிகுந்த பானங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோகோவின் தேவையானது ஒவ்வொரு வருடமும் அதிகரித்து கொண்டு வருகிறது. இதன் தேவையானது உற்பத்தியின் அளவை விட அதிகமாக இருப்பதால் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள் :

கிரையல்லோ (Criollo) மற்றும் ஃபாரஸ்டிரோ (Forestero) ஆகிய இரண்டு வகைகள் உள்ளன. இவற்றில் க்ரையல்லோ சிவப்பு நிற காய்களையும் ஃபாராஸ்டிரோ பச்சை மற்றும் மஞ்சள் நிற காய்களையும் கொண்டது. இதில் ஃபாரஸ்டிரோ வகைகள் இந்தியாவில் பெருமளவு சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

பருவம்

மார்கழி-தை மாதங்களில் நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.

மண்

நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் அல்லது வண்டல் மண்ணில் 15 டிகிரிலிருந்து 39 டிகிரி வரை வெப்பநிலை உள்ள இடத்தில் கோகோ நன்கு வளரும். மண்ணின் கார அமிலத்தன்மை 4.5 அளவிற்கு குறையாமலும் 8.0 அளவிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் இட்டு, சமன் செய்து கொள்ள வேண்டும். கோகோ மரக்கன்றுகளை நடவு செய்ய 1.5 அடி ஆழம், நீளம் மற்றும் அகலமுள்ள குழிகளை எடுக்க வேண்டும். குழிகளை எடுத்து ஒரு மாத காலத்திற்கு ஆற விட்டு மண், மற்றும் தொழு உரத்தை 3:1 என்கிற விகிதத்தில் கலந்து குழிகளை நிரப்ப வேண்டும்.

விதையளவு

அதிக விளைச்சல் கொண்ட தாய் மரங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒட்டு ரகத்தேர்வுகள் மூலம் பயிர்பெருக்கம் செய்யப்படுகிறது. ஏக்கருக்கு அதிக பட்சமாக 200 கோகோ செடிகளை சாகுபடி செய்யலாம்.

விதைத்தல்

தயார் செய்துள்ள குழிகளில் கோகோ மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். நடவின் போது கோகோ நாற்றின் வேர் பகுதியில் இருக்கும் மண்ணின் மேல்பரப்பும், பூமியின் மேல்பரப்பும் சம அளவில் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். நடவு செய்தபின் கைகளால் நாற்றினை சுற்றி மண்ணை அணைக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் கால்களால் நாற்றினை சுற்றி மிதிக்க கூடாது.

இதற்கு 50 முதல் 60 சதம் வரை சீரான நிரந்தர நிழல் தேவைப்படும். எனவே தென்னை, பாக்கு தேப்புகளில் ஊடுபயிராக பயிர் செய்யலாம். 25 அடி மற்றும் அதற்கு அதிகமான இடைவெளியில் வளர்க்கப்படும் தென்னையில் இரண்டு தென்னை வரிசைக்கு இடைவெளியில் 10 அடி இடைவெளியிலும், இரண்டு தென்னை மரங்களுக்கு நடுவில் ஒரு கோகோ செடியையும் நடவு செய்யலாம்.

பாக்கு தோப்பில் இரண்டு பாக்கு மர வரிசைக்கு இடைவெளியில் 16 அடி இடைவெளி விட்டு கோகோ மரக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

கன்று நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். கோகோ பயிருக்கு ஆண்டு முழுவதும் மண்ணில் ஈரப்பதம் சீராக இருக்குமாறு பராமரிக்க வேண்டும். கோடை காலங்களில் ஒவ்வொரு மரத்திற்கும் நாள் ஒன்றுக்கு குறைந்த அளவு 20 லிட்டர் நீர் பாசனம் தேவைப்படுகிறது. சொட்டு நீர் மூலமாகவோ அல்லது வாய்கால் மூலமாகவோ நீர்பாசனம் செய்ய வேண்டும்.

உரங்கள்

ஒரு ஏக்கருக்கு 220 கிராம் யூரியா(தழைச்சத்து), 250 கிராம் சூப்பர் பாஸ்பேட்(மணிச்சத்து) மற்றும் 240 கிராம் பொட்டாஷ்(சாம்பல் சத்து) உரங்களை இட வேண்டும்.

முதல் வருட செடிகளுக்கு மேலே குறிப்பிட்ட அளவில் மூன்றில் ஒரு பாகம் அதாவது 75 கிராம் யூரியா, 85 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 80 கிராம் பொட்டாஷ் உரங்களை இரண்டு சம பாகமாக பிரித்து நடவு செய்த நாளிலிருந்து 6 மாத இடைவெளியில் அளிக்க வேண்டும்.

இரண்டாவது வருடம், மேலே குறிப்பிட்ட அளவில் மூன்றில் இரண்டு பாகம் அதாவது 145 கிராம் யூரியா, 165 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 160 கிராம் பொட்டாஷ் உரங்களை இரண்டு சம பாகங்களாக பிரித்து நடவு செய்த நாள் முதல் 6 மாத இடைவெளியில் அளிக்க வேண்டும்.

மூன்றாவது வருடம், கோகோ செடிகளுக்கு வருடம் ஒன்றிற்கு 220 கிராம் யூரியா, 250 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 240 கிராம் பொட்டாசியம் ஆகிய உரங்களை மூன்று சம பாகங்களாக பிரித்து 4 மாத இடைவெளியில் இட வேண்டும்.

கோகோவில் உலர்ந்த விதைகளின் விளைச்சல் 2 கிலோ அளவிற்கு வந்தவுடன் மூன்றாவது வருடம் தந்த உர அளவை இரட்டிப்பாக்கி நான்கு பாகங்களாக பிரித்து 3 மாத இடைவெளியில் அளிக்க வேண்டும்.

நுண்ணூட்டச் சத்துக்கள்

கோகோவில் நுண்ணூட்டச் சத்துகளான இரும்பு மற்றும் துத்தநாக குறைபாடுகள் காணப்படுவதால் வருடத்திற்கு இரண்டு முறை 0.5 சதவிகித அளவில் துத்தநாக சல்பேட் மற்றும் அன்னபேதி உப்பு கரைசலை கை தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

கோகோ செடிகள் மரங்களாகும் வரை செடிகளைச் சுற்றி களைச்செடிகளை அகற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

செடிகளை நட்ட இரண்டாவது வருடத்தில் செடியின் முக்கிய தண்டில் தோன்றும் போத்துகளை அவ்வப்போது கிள்ளி நீக்கி விட வேண்டும். செடிகளின் கிளைகளை குடை வடிவத்தில் இருக்குமாறு வடிவமைக்க வேண்டும். செடிகளை நட்ட மூன்று ஆண்டுகள் கழித்து நோய் தாக்கப்பட்ட, மற்ற காய்ந்த கிளைகளை நீக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் விசிறி கிளைகளிலிருந்து மேல் நோக்கி வளரும் போத்துகளை கூர்மையான கத்தி கொண்டு வெட்டி விட வேண்டும். வெட்டிய பாகத்தில் தாமிர பூசண கொல்லி பசையைத் தடவ வேண்டும். நோய் மற்றும் பூச்சிகள் தாக்கப்பட்ட காய் மற்றும் பழங்களை கூர்மையான கத்திக்கொண்டு பூ மெத்தை (Cushion) பாதிக்கப்படாத வண்ணம் நீக்கி அழிக்க வேண்டும்.

பராமரிப்பு

கோகோ நடவு செய்யப்பட்ட இடங்களில் வெளிப்புற வரிசையில் அமைந்துள்ள செடிகளுக்கு கூடுதலாக நிழல் விழுமாறு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக தென்னை மட்டையின் நுனி பாகத்தை வெட்டி செடியின் அருகே நடுவதன் மூலம் தற்காலிக நிழலைத் தரலாம். இது தவிர, வாழை கன்றுகளை நடவு செய்து கோகோ செடிகளுக்கு நிழலை ஏற்படுத்தலாம்.

கோகோ அதிக இலைகளை உற்பத்தி செய்யும் மரமாகும். வளர்ந்த கோகோ மரங்களிலிருந்து வருடந்தோறும் 800 கிலோ இலைகள் உதிர்ந்து மக்கி மண்ணுக்கு உரமாக கிடைக்கின்றன. உதிரும் இலைகளை மண்ணுக்கு மூடாக்காக பரப்பி மண்ணின் ஈரத்தன்மையை பாதுகாக்கலாம்.

பூக்கும் பருவம்

கோகோ செடிகள் நட்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆண்டிலிருந்து பூக்கத் துவங்கும். மரத்தின் முக்கிய கிளை மற்றும் விசிறி கிளைகளில் கொத்தாக பூக்கள் உருவாகும். ஒவ்வொரு பூ கொத்திலும் 10-20 பூக்கள் இருக்கும். ஒரு மரத்தில் பல ஆயிரக்கணக்கான பூக்கள் பூத்தாலும் அவை அனைத்தும் காயாக மாறாது. பொதுவாக மே – ஜீன் மற்றும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் அதிகளவில் பூக்கள் தோன்றும்.

பயிர் பாதுகாப்பு
மாவுப்பூச்சி

மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த 2 மி.லி ரோகார் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும். பூச்சிகளின் தாக்குதல் தொடர்ந்து காணப்பட்டால் 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

தேயிலைக் கொசு நாவாய்ப் பூச்சி

இதனைக் கட்டுப்படுத்த உதிர்ந்து விழுந்துள்ள பூ மொட்டுகள் மற்றும் இளங்காய்களைச் சேகரித்து அழித்து விட வேண்டும். இளம் தளிர் பருவத்தில் 2 மி.லி குளோரிபைரிபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பூ பூக்கும் பருவத்தில் 2 மி.லி ரோகார் (டைமித்தோயேட்) மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, அத்துடன் 30 கிராம் யூரியாவையும் கலந்து கோகோச் செடிகள் மீது தெளிக்க வேண்டும். இளம் காய் பருவத்தில் 2 கிராம் நனையும் செவின் (கார்பரில்) 50% மருந்தையும், 30 கிராம் யூரியாவையும் ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.

வேர்ப்புழுக்கள்

இந்த வேர்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த புதிதாக நடவு செய்யப்பட்டுள்ள கோகோ கன்றுகளைச் சுற்றி ஒரு செடிக்கு 10% செவின் தூளை (10 கிராம்) இட வேண்டும். வளர்ந்த செடிகளில் இப்புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்த 2 கிராம் நனையும் செவின் 50% மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து, மரத்தை சுற்றியுள்ள மண்பகுதி நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.

செந்நிறத் தண்டுத் துளைப்பான்

இப்பூச்சியின் இளம் புழுக்கள் முதன்மைத் தண்டில் ஜார்க்கட் பகுதிக்கு சற்று கீழே, தண்டைத் துளைத்துச் சென்று சேதம் ஏற்படுத்துகின்றன. அதனால் முதன்மைத் தண்டின் மேற்பகுதி முழுவதும் காய்ந்து விடுகிறது. விசிறிக் கிளைகளில் இப்புழுக்களின் தாக்குதலால் இலைகள் காய்ந்து, கிளைகள் ஒடிந்து விடுகின்றன.

இப்பூச்சியைக் கட்டுப்படுத்த, பூச்சி தாக்கிய பாகங்களை வெட்டி எரித்துவிட வேண்டும். 2 கிராம் நனையும் செவின் (கார்பரில்) 50% மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து மரங்களின் மீது தெளிக்க வேண்டும்.

அசுவினி தாக்குதல்

அசுவினிப் பூச்சிகளின் தாக்குதல் ஜீலை முதல் ஜனவரி வரை அதிக அளவில் காணப்படும். இப்பூச்சிகள் தாக்கிய மரங்களில் எறும்புகள் நடமாட்டம் காணப்படும். அசுவினிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த 1.5 மி.லி ரோகார் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு மாத இடைவெளியில் இரு முறை தெளிக்க வேண்டும்.

இலைகளைத் தின்னும் புழுக்கள்

இப்புழுக்களின் தாக்குதல் ஜீன்-ஜீலை மாதங்களில் குருத்து இலைகளில் அதிகமாகக் காணப்படும். இப்புழுக்களை அழிப்பதற்கு 2 கிராம் செவின் (கார்பரில்) 50 சதம் நனையும் தூள் மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

சாம்பல் நிற கூன் வண்டுகள்

இவ்வண்டுகளின் புழுக்கள் மண்ணுக்கடியில் வாழ்கின்றன. எனவே இவைகளைக் கட்டுப்படுத்த 2 கிராம் நனையும் செவின் (கார்பரில்) 50% மருந்தை, 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து மரத்தைச் சுற்றியுள்ள மண்பகுதி முழுவதும் நன்றாக நனையுமாறு ஊற்ற வேண்டும். வருடத்திற்கு இரண்டு முறை மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் இம்மருந்தை தெளிக்க வேண்டும்.

காய் துளைப்பான்

இப்புழுக்களை அழிப்பதற்கு 2 மி.லி மோனோகுரோட்டோபாஸ் மருந்து அல்லது 2 கிராம் செவின் (கார்பரில்) 50 சதம் நனையும் தூள் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

கருங்காய் நோய்

காய்ந்த மற்றும் நோய் தாக்கிய காய், பழங்களை அகற்ற வேண்டும். நிழலை குறைத்து நல்ல காற்றோட்டம் ஏற்படுமாறு செய்ய வேண்டும். போர்டோகலவை ஒரு சதம், மழைக்கு முன் ஒரு முறையும் பின்பு தேவைப்பட்டால் தெளிக்க வேண்டும்.

வெள்ளை நூற்கருகல்

தேவைக்கு அதிகமாக நிழல் படாமல் இருக்க வேண்டும். போர்டோகலவை ஒரு சதம் (அ) காப்பர் ஆக்ஸிகுளோரைடு (0.3%-3 கிராம் மருந்து 1 லிட்டர் நீர்) கலவையை மழைக்கு முன்பு ஒரு முறையும் பின்பு தேவைப்பட்டால் தெளிக்க வேண்டும்.

கேங்கர் நோய்

இந்நோயைக் கட்டுப்படுத்த நோய் தாக்கப்பட்ட காய்களைக் கண்டுபிடித்து அழிக்க வேண்டும். கோகோ தோட்டத்தில் முறையான வடிகால் வசதிகள் செய்ய வேண்டும். இந்நோயின் ஆரம்ப நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சிறிதளவு செதுக்கி விட்டு போர்டோ பசையைத் தடவ வேண்டும்.

அறுவடை

செடிகள் நட்ட மூன்றாவது வருடம் முதல் காய்க்க துவங்கும். பூக்கள் பூத்து 120-150 நாட்களில் காய்கள் அறுவடைக்கு தயாராகி விடும். முதிர்ச்சி அடைந்த காய்கள் பச்சை நிறத்திலிருந்து இளம் மஞ்சள் நிறமாக மாறும் நிலையில் அறுவடை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு முறையும் காய்களை அறுவடை செய்யும் பொழுது பூ மெத்தை (Cushion) பாதிக்கப்படாத வகையில் கத்தியால் காம்பு பகுதியில் வெட்டி அறுவடை செய்ய வேண்டும்.

விதைகளை பிரித்தெடுத்தல்

அறுவடை செய்த காய்களை நிழலில் 5 முதல் 6 நாட்கள் குவியலாக குவித்து சீராக பழுக்க வைக்க வேண்டும். இந்த பழங்களின் விதைகளில் உள்ள அமிலத்தன்மை குறைந்து வாசனைத் தன்மை ஏற்படும். மேலும் உலர் விதையின் எடையும் அதிகரிக்கும். நன்றாக பழுத்த பழங்களை சிறிய தடி கொண்டு தேங்காய் போல் சரிபாதியாக உடைத்து விதைகளை மட்டும் தனியாக பிரித்தெடுக்க வேண்டும். காய்களை உடைக்கும் பொழுது விதைகள் நசுங்காதவாறு கையாள வேண்டும். கோகோ பழங்களிலிருந்து பிரித்தெடுத்த சதைப்பற்றுடன் கூடிய விதைகளை நொதிக்க வைத்து பதப்படுத்த வேண்டும். விதைகளை சுற்றியுள்ள வழவழப்பான சதையை நீக்கவும், முளையை கொல்லவும், விதையுறையை இளக்கவும், கசப்புத் தன்மையை குறைத்து மணம் மற்றும் சுவையை கூட்டவும் நொதித்தல் செய்யப்படுகிறது.

நொதிக்க வைத்தல்
கூடைமுறை நொதித்தல்

மூங்கில் கூடைகளை பொருத்தமான அளவில் பயன்படுத்தி அதன் அடிப்பகுதியில் சதை கூழ் வடிந்து போகுமாறு அமைக்க வேண்டும். இதற்காக வாழை இலையை கூடையினுள் பரப்பி அதன் மேல் விதைகளை நிரப்ப வேண்டும். அதன் மேல் பகுதியை வாழை இலையை கொண்டு மூடி கனமான பொருளை வைத்து சதை வியர்ப்புகள் நன்கு வடியும் வகையில் சற்றே உயரமான தளத்தில் வைக்க வேண்டும். மூன்றாவது மற்றும் ஐந்தாவது நாளில் நன்றாக கிளற

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow