இலந்தை பழ மரம் வளர்க்கும் முறை மற்றும் பயன்கள்

நாவல்பழம் மரம் ஒரு பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும். நாவல்பழத்தின் தாயகம் இந்தியா மற்றும் இந்தோனேஷியா ஆகும்.
இது 30 மீட்டர் உயரம் வரை வளரும். மேலும் 100 ஆண்டுகள் வரை வாழும் இயல்பை உடையது. புளோரிடா, கலிபோர்னியா, அல்ஜீரியா, இஸ்ரேல் போன்ற வெப்பமண்டல பகுதிகளிலும் வளர்கிறது.
நாவல் எப்படி பயிரிடுவது…?
இரகங்கள்
இந்தப் பழ சாகுபடியில் எந்த வகைகளும் இல்லை. பொதுவாக வட இந்தியாவில் வளர்க்கப்படும் வகை ராம் நாவல் ஆகும். பழங்கள் பெரியதாகவும், நீள்சதுர வடிவாகவும், முழுமையாக பழுத்த நிலையில் அடர் ஊதா அல்லது நீல கருப்பு நிறத்திலும் இருக்கும். நன்கு பழுத்த பழத்தின் கூழ் ஊதா நிறத்தில் இருக்கும். பழம் அதிக சாறுடையதாகவும், இனிப்பாகவும், கொட்டையின் அளவு சிறியதாகவும் இருக்கும். இந்த வகைகள் ஜீன், ஜீலை மாதங்களில் பழுக்கும்.
மற்றொரு வகையானது, பழங்கள் சிறிய அளவாகவும், சற்று உருண்டையாகவும் இருக்கும். பழுத்த பழங்கள் அடர் ஊதா நிறம் அல்லது கருமையாகக் காணப்படும். இது குறைவான சாறுடையது, எடை மற்றும் சதையின் இனிப்புத் தன்மை ராம் நாவலை விடக் குறைவு ஆனால் கொட்டை அளவு பெரியதாக இருக்கும். பொதுவாக இவ்வகைப் பழங்கள் ஆகஸ்ட் மாதத்தில் பழுக்கும்.
பருவம்
ஜுலை – ஆகஸ்ட் மாதங்களில் நடவு செய்யலாம்.
மண்
நாவல் மரம் அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது. எனினும் அதிக உற்பத்தி திறன் மற்றும் தரமான வளர்ச்சிக்கு களிமண் அல்லது நன்கு வடிகால் வசதியுள்ள மண் தேவை. நாவல் உப்புத்தன்மை மற்றும் நீர் தேங்கிய நிலையிலும் நன்றாக வளரும்.
நிலம் தயாரித்தல்
நடுவதற்கு முன் தேர்வு செய்யப்பட்ட விளைநிலத்தை சமன்படுத்தி உழ வேண்டும். 1 x 1 x 1 மீ குழிகளை 10 மீ இடைவெளியில் எடுக்க வேண்டும். குழியில் 75% மேல் மணல் மற்றும் 25% தொழுவுரம் அல்லது மட்கிய உரம் ஆகியவற்றை கலந்து நிரப்ப வேண்டும்.
விதை
விதை மற்றும் நாற்று முறையில் நாவல் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. புதிய விதைகளை தேர்வு செய்து விதைக்க வேண்டும். முளைக்க சுமார் 10 முதல் 15 நாட்களாகும். நாற்றுகளை வசந்த காலத்தில் (பிப்ரவரி முதல் மார்ச்) அல்லது மழைக் காலத்தில் அதாவது ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை நடலாம்.
விதைத்தல்
நாவல் இனப்பெருக்கம் செய்வதற்கு 10 – 14 மி.மீ தடிமனாக இருக்கும் ஒரு வயதான நாற்றுகளில் ஒட்டுக்கட்டுதல் செய்ய வேண்டும். குறைவான மழை உள்ள பகுதிகளில் ஒட்டுக்கட்டுதல் செய்ய சிறந்த மாதம் ஜுலை முதல் ஆகஸ்ட் ஆகும். மழை அதிகமாக உள்ள பகுதிகளில் ஒட்டுக்கட்டுதல் மே – ஜுன் மாதங்களில் செய்யலாம்.
தயார் செய்துள்ள குழிகளின் நடுப்பகுதியில் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடவு செய்தால் மே மற்றும் ஜுன் மாத வறட்சியை தாங்கி வளருவது கடினமாக இருக்கும். எனவே ஜுலை – ஆகஸ்ட் மாதங்களில் நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
செடிகள் வளர்ச்சி அடையும் வரை தொடர்ச்சியாக நீர்ப்பாய்ச்ச வேண்டும். மரம் வளர்ச்சி அடைந்த பின்னர் பாசன இடைவெளியை குறைக்க வேண்டும். இளம் மரங்களுக்கு ஒரு ஆண்டில் 8 முதல் 10 முறை நீர்ப்பாசனம் தேவைப்படும். வளர்ச்சி அடைந்த மரங்களுக்கு 4 முதல் 5 முறை நீர்ப்பாசனம் போதுமானது. இலையுதிர் மற்றும் குளிர் மாதங்களில் மண் உலர்ந்த போது மட்டும் பாசனம் செய்ய வேண்டும். இது குளிர் காலங்களில் பனியின் மோசமான விளைவுகளில் இருந்து மரத்தைக் காக்கும்.
உரங்கள்
மரம் நன்கு வளரும் நிலையில் மரம் ஒன்றுக்கு 75 கிலோ தொழு உரம் அளிக்க வேண்டும். பொதுவாக, நாற்று மூலம் நட்ட செடி காய் பிடிக்க 8 முதல் 10 வருடமாகும். ஒட்டுக்கட்டுதல் மூலம் நட்ட செடி காய் பிடிக்க 6 முதல் 7 வருடமாகும். மண்ணில் அதிக ஊட்டசத்து இருந்தால் இலைகள் அதிகமாக வரும், அதனால் காய் பிடிப்பதற்கு தாமதமாகும். இந்த மரங்களுக்கு உரம் மற்றும் பாசன அளவு மிகக் குறைவாக வழங்க வேண்டும். செப்டம்பர் – அக்டோபர் மற்றும் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நிறுத்திவிட வேண்டும். இந்த முறை நாவலில் மொட்டு அரும்புவதற்கும், காய் பிடிப்பதற்கும் உதவுகிறது. மரத்தின் வளர்ச்சி மற்றும் காய் பிடிக்கும் அளவைக் கொண்டு உரத்தை அளிக்க வேண்டும்.
பூ மலர்ந்த மூன்று முதல் நான்கு வாரங்களில் உதிர்தல் அதிகமாக இருக்கும். பூ மலர்ந்த பின் ஜிஏ3 60 பிபிஎம் (GA3 60 ppm) ஒரு முறை மற்றும் 15 நாட்கள் கழித்து காய்பிடிப்பிற்குப் பின் ஒரு முறை தெளிப்பதன் மூலம் காய் உதிர்தலைக் குறைக்கலாம்.
செடிகள் வளர்ச்சி அடையும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். நாவலுக்கு வழக்கமான கவாத்து செய்ய தேவையில்லை. உலர்ந்த மற்றும் குறுக்குக் கிளைகளை நீக்க வேண்டும். தாவரத்தின் கிளைகளை தரைமட்டத்திலிருந்து 60 முதல் 100 செ.மீ வரை வளர விட வேண்டும்.
அறுவடை
நாவல் மரத்தில் நாற்று 8 முதல் 10ம் ஆண்டிலும், ஒட்டுச்செடி 6 முதல் 7ம் ஆண்டிலும் பலன் கொடுக்கும். எனினும், முழுமையான மகசூல் 8 முதல் 10ம் ஆண்டில் கிடைக்கும். தொடர்ந்து 50 முதல் 60 வயது வரை பலன் கிடைக்கும். ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் பழம் பழுக்கும். முழுவதும் பழுத்த பழம் பெரிதாக அடர் பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தில் காணப்படும். பழம் பழுத்தவுடன் மரத்திலிருந்து பறித்துவிட வேண்டும். பழங்களைப் பறிக்கும்போது சேதம் ஏற்படாமல் கவனமாக பறிக்க வேண்டும்.
நாற்று நடவில் நன்கு வளர்ந்த மரத்திலிருந்து வருடத்திற்கு 80 முதல் 100 கிலோ வரையிலும், ஒட்டுச்செடி மரத்தில் வருடத்திற்கு 60 முதல் 70 கிலோ வரையிலும் பழம் கிடைக்கும்.
மரம் நன்கு வளரும் வரை குறுகிய கால பயிர்களான அவரை, கத்தரி போன்ற காய்கறிகளை சாகுபடி செய்யலாம்.
நாவல் பயன்கள்
- நாவல் பழச்சாறு மற்றும் மாம்பழச் சாறை சம அளவு கலந்து சர்க்கரை நோயாளிகளுக்கு கொடுத்தால் தாகம் தணியும்.
- சற்று பழுத்த பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் வினிகர் பசியை தூண்டும் தன்மை கொண்டது. இறைப்பை குடல் வழி நீக்கி, சிறுநீர்ப் பெருக்கியாகவும் பயன்படுகிறது.
- நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.
- பொடி செய்யப்பட்ட விதைகள் சர்க்கரை நோயைக் குணப்படுத்த உதவுகிறது.
- நாவல் விதைகளில் அதிக அளவில் புரதம், மாவுச் சத்து மற்றும் கால்சியம் உள்ளதால் விலங்குகளுக்கு அடர் தீவனமாகக் கொடுக்கப்படுகிறது.
- இரத்தம் சுத்தப்படுத்துதலிலும் நாவல் முக்கிய இடம் பெறுகிறது.
- மூலத் தொந்தரவு உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த தொந்தரவில் இருந்து விடுபட நாவல் பழம் கைகொடுத்து உதவுகிறது.
What's Your Reaction?






