Un Marbile Vizhi Moodi-HD Ilaiyathalapathy song Ninaithen Vandhai
Un Marbile Vizhi Moodi-HD Ilaiyathalapathy song Ninaithen Vandhai
Director: K. Selva Bharathy
Music director: Deva
Singer: K. S. Chithra
படம் : நினைத்தேன் வந்தாய்
பாடல் : ஆசை நாயகனே
இசை அமைப்பாளர் : தேவா
வரிகள் :
ஆசை நாயகனே சௌக்கியமா
உந்தன் நலம் நாடும் பிரியமானவளின் கடிதம்
உன் மார்பில் விழி
மூடித் தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம்
தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்
எந்தன் வளையல் குலுங்கியதே
கொலுசும் நழுவியதே
வெக்கத்தில் கன்னங்கள் கூசியதே
மனம் காலடி ஓசையை எதிர்பார்த்து துடிக்கின்றதே அன்பே ..
உன் மார்பில் விழி
மூடித் தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம்
தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்
சின்னக் குயில்கள் உன்னை உன்னை நலம் கேட்குதா
நெஞ்சில் பரவும் அலை அலை உன்னை ஈரம் ஆக்குதா
மெல்ல நகரும் பகல் பகல் யுகம் ஆகுதா
மூச்சே விட்டதால் தலையணை அது தீயில் வேகுதா
நெஞ்சம் எதிலும் ஒட்டாமல்
கண்ணில் கனவும் வற்றாமல்
தினமும் தினமும் உருகும் மனது
ஏன் இந்த நிலைமை தெரியவில்லை
இந்தப் பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா
அன்பே
உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன்
தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்
விடியும் பொழுதில்
காலை வெயில் நீ பனித்துளி இவளல்லவா
என்னைக் குடித்தே இனி இனி உன் தாகம் தீர்க்கவா
துள்ளும் நதி நீ இவள் அதில் நுரையல்லவா
இருவருக்கும் இடைவெளி இனி இல்லை அல்லவா
நிலவே வேகும் முன்னாலே
வருவாய் எந்தன் முன்னாலே
அழகும் உயிரும் உனக்கே சொந்தம்
ஏராளம் ஆசை நெஞ்சில் உண்டு
அதை எழுதிட நாணங்கள் தடுக்கிறதே
அன்பே
உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன்
தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்
விடியும் பொழுதில்
What's Your Reaction?